என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கரூரில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    • கரூரில் தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி சக்திவேல் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

    கரூர்,

    மத்திய அரசை கண்டித்து கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட தி.மு.க. மற்றும் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி சக்திவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவ காமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு இணை செயலாளர் நெல்லி குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூருக்கு புதிய பஸ் நிலையம், உட்கட்டமைப்பு வசதி உள்பட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். பா.ஜ.க. அரசு வீட்டிற்கு போகக்கூடிய காலம் நெருங்கி விட்டது. மணிப்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய பா.ஜ.க. அரசையும், மத்திய அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்என்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர்கள் கரூர் கணேசன், எஸ்.பி.கனகராஜ். சுப்பிரமணியன். கோல்டுஸ்பாட் ராஜா, அன்பரசன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×