என் மலர்
கரூர்
- 100 பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
- பால் குளிருட்டு நிலையம் திறந்து வைத்து அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
கரூர், ஜூலை 30-
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் வல்லகுளம், திருமலை ரெட்டிபட்டி, வேப்பங்குடி கிருஷ்ணராயபுரம் வட்டம் மஞ்சா நாயக்கன்பட்டி ஆகிய 4 இடங்களில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிர்விப்பு மையங்களை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். தோரணங்க்கல்பட்டி ஆவின் குளிரூட்டும் மையத்தில் 50000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் குளிர்விப்பு மையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் மாவட்டம் உற்பத்தியாளர்களின், பால்களுக்கும் ஒரே மாதிரி விலை என்பதை மாற்றி, தற்போது பாலின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயத்து இருப்பது என்பது பால் உற்பத்தியாளர்கள்யிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தலா 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.106.51 லட்சம் மதிப்பிலான பால் குளிர்விப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.தற்சமயம் வழக்கத்தை விட நாளொன்றுக்கு கூடுதலாக தமிழ்நாடு முழுவதும் 3.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.விவசாய பெருங்குடி மக்களுக்கு 5000க்கும் மேற்பட்ட கால்நடை வாங்குவதற்கான கடன் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். 2 இலட்சம் கறவை மாடுகள் புதியதாக வாங்குவதற்கான கடன் வசதிகளை செய்திட வேண்டும். 10 மற்றும் 15 மாடுகளுக்கு மேல் வைத்து வளர்க்கக்கூடிய சிறிய பால் பண்ணைகள் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இப்பொழுது 203 கிராமங்களில் 146 கூட்டுறது பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இன்னும் நூறு கூட்டுறது பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிகப்படுத்தப்பட உள்ளோம். கிராமங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்தர்.மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி துணை மேயர் சரவணன், ஆவின் நிறுவன பொது மேலாளர் நாகராஜன், இணை பதிவாளர் இரணியன் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள். ஆவின் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
- சீதாராமன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
- சீதாராமனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
குளித்தலை:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோடு ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 34). இவர் அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26) . இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் கோவையில் நேற்று நடைபெற்ற தனியார் வங்கி மேலாளர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர். பின்னர் ஒரு காரில் இருவரும் வீடு திரும்பினர்.இந்த கார் நேற்று நள்ளிரவு குளித்தலை அருகே திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் வந்த போது விபத்துக்குள்ளானது. திருச்சியில் இருந்து கரூர் நோக்கி தைல மரம் ஏற்றிச் சென்ற லாரியும் அந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சீதாராமன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருச்சி மேலாளர் விக்னேஷ் படுகாயத்துடன் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இறந்த சீதாராமனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சீதாராமனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்துள்ளனர்.
மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்தில் கணவர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கரூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், சி.ஐ.டியு.. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜ., அரசுகனை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பகோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜா முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.
- தோகைமலையில் இளம்பெண் மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந் தவர் சாந்தி (வயது 40). இவரது மகள் ஜீவிதா, 'திருச்சி தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 25 இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தன் மகளை கண்டு பிடித்தர வேண்டும் என, தோகைமலை போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏழூர் சாலையை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
- மோசமான நிலையில் சாலை இருப்பதால் புதுப்பித்து தர கோரிக்கை
கரூர்,
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியிலிருந்து ஏழூர் பகுதிக்தான சாலை செல்கிறது. தாந்தோணிமலை பகுதியில் இருந்து ஏமூர்,புதூர், திருச்சி பைபாஸ் சாலை, மூலக்காட்டனூர், காந்தி கிராமம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் இந்தவழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலையில் குறிப் பிட்ட தூரம் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகளவு நடைபெற்று வருகிறது. எனவே, ஏமூர் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரூரில் உடல் நலம் குன்றிய பெண் மாயமானார்
- தாய் மாயமானதாக மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்
கரூர்,
கரூர் அருகே, தாயை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய் துன்னார். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை அசோக்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த ஜான்வெட்சி என்பவரது மகள் சகிலா பானு (வயது 47). இவர் கடந்த ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த, 10ல் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சகிலா பானு, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சகிலா பானுவின் மகள் ஆல்வின் சன்மோஸ் போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசா ரிக்கின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கருர்,
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 52). இவர், கரூர்-கோவை சாலை க.பரமத்தி அருகே, காமராஜர் நகர் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலையில் அடிபட்டு, அதேஇடத்தில் தங்கவேல் உயிரிழந்தார்.இதுகுறித்து, தங்கவேலு மளைவிதிலகவதி, கொடுத்த புகார்படி,க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
- கரூர் மாவட்டம்புன்னம் சத்திரம் சடையம் பாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா
- 5ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம்
கரூர்
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே புன்னம் ஊராட்சியில் சடையம்பாளையம் காலனிதெருவில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.
இங்கு 5ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும் இந்த திருவிழாவையொட்டி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோவிலை வந்தடைதல் பிறகு திருவிழாவிற்காக மதுரைவீரன், கன்னிமார் தெய்வங்களுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினசரி அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.
காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடும் இதன்பின் கிடாவெட்டும், மதுரைவீரனுக்கு சிறப்புபூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.
- அடிப்படை வசதிகளை செய்துதர கோரிக்கை பொது மக்கள் கோரிக்கை
- சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் வசித்து வருகின்றனர்
கரூர்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் ஊராட்சி வல்லாகுளத்துபாளையம் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளில்
சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மயானத்தில் போதுமான அடிப்படை வசதி இல்லை மயானத்தை சுற்றி தற்போது முட்பு தர்களும், முட்செடிக ளும் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், விஷ ஜந்துக்களின் நட மாட்டமும் அதிகரித்துள்ளதாகவும் இந்த பிரச்சனையால் மயானத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சடலத்தை அடக்கம் செய்வதிலும் ஏழை எளிய மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பலமுறை ஒன்றிய ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும்.
ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று வயது முதிர்வு காரணமாக முதியவர் ஒருவர் இறந்தார். இவரை சுடுகாட்டிற்கு புதைப்பதற்காக சடலத்தை எடுத்து சென்றனர். புதைக்க குழி வெட்டிய போது திடிரென ஊற்று ஏற்பட்டு புதைப்பதற்காக தோண்றிய குழி முழுவதும் திடிரென தண்ணீர் நிரம்பியது. பிறகு தண்ணீரை வெளியேற்றி விட்டாலும் மீண்டும் புதைப்பதற்காக தோண்றிய குழி முழுவதும் திடீரென தண்ணீர் நிரம்பி விடுகிறது.
இதன்பிறகு சடலத்தை தீ மூட்டி எறித்துவிட்டு உறவினர்கள் வெளியேறினர்.
எனவே மக்களின் நலன் கருதி, இங்குள்ள மயானத்தை சுற்றிலும் மழைநீர் வடிகால் வசதி, சுற்றுச்சுவர், தகனமேடை மற்றும் தண்ணீர் டேங்க் உள் ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என அப்பகுதியினர் எச்சரிக்கை விடுத்தனர்.
- ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி திறனறிவுத் தேர்வில் சாதனை
- சர்வதேச திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று சாதனை
கரூர்
பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவி திறனறிவுத் தேர்வில் சர்வதேச அளவில் 2-ஆம் இடம் பெற்று சாதனை.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என். ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி உதய நிலா சர்வதேச திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தேர்வு நான்கு சுற்றுகளை கொண்டது.மாவட்ட, மாநில, தேசிய அளவிலான முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான 4-ஆம் சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இந்தத் திறனறிவுத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான சுற்றில் 2450 மாணவர்களும், மாநில அளவில் 1700 மாணவர்களும், தேசிய அளவில் 900 மாணவர்களும், சர்வதேச அளவில் 400 மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் சர்வதேச அளவில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 9000 மாணவர்கள் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று வெற்றிபெ ற்ற ஆர்.என்.ஆக்ஸ்போர்டுபப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவிக்கு கேடயம் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.
மேலும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குநர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி முதல்வர், பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினார்கள்.
- கரூரில் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்
- மணிப்பூர் பா.ஜ.க. அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கரூர்
பெண்களிடம் பாலியல் வன்கொ டுமை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவறிய மணிப்பூர் பா.ஜ.க. அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவரும், கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆர்.ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார்,
மாநகர துணை தலைவர் கண்ணப்பன், சண்முகசுந்தரம், அரவக்குறிச்சி நகர் மன்ற உறுப்பினர் பஜிலா பானு, புகலூர் நகர் மன்ற உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் மலையாண்டி லீலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- க.பரமத்தியில் கால்நடை மருத்துவ முகாம் இளங்கோ எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்
- விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கரூர்
அரவக்குறிச்சி தொகுதி, க.பரமத்தி மேற்கு ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சி, குப்பாகவுண்டன் வலசில், நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை க.பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான
மொஞ்சனூர் இளங்கோ
தொடங்கி வைத்து, கால்நடை மருத்துவ திட்டங்கள், மற்றும் பராமரிப்பு குறித்து மருத்து வர்களிடம் கேட்டறிந்து, மக்களிடம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் க.பரமத்தி வடக்கு ஒன்றிய செய லாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னருமான நெடுங்கூர் கார்த்திக் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






