என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லாகுளத்துபாளையம் மயானத்திற்கு  அடிப்படை வசதிகளை செய்துதர கோரிக்கை
    X

    வல்லாகுளத்துபாளையம் மயானத்திற்கு அடிப்படை வசதிகளை செய்துதர கோரிக்கை

    • அடிப்படை வசதிகளை செய்துதர கோரிக்கை பொது மக்கள் கோரிக்கை
    • சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் வசித்து வருகின்றனர்

    கரூர்

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் ஊராட்சி வல்லாகுளத்துபாளையம் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளில்

    சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மயானத்தில் போதுமான அடிப்படை வசதி இல்லை மயானத்தை சுற்றி தற்போது முட்பு தர்களும், முட்செடிக ளும் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், விஷ ஜந்துக்களின் நட மாட்டமும் அதிகரித்துள்ளதாகவும் இந்த பிரச்சனையால் மயானத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக சடலத்தை அடக்கம் செய்வதிலும் ஏழை எளிய மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பலமுறை ஒன்றிய ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும்.

    ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று வயது முதிர்வு காரணமாக முதியவர் ஒருவர் இறந்தார். இவரை சுடுகாட்டிற்கு புதைப்பதற்காக சடலத்தை எடுத்து சென்றனர். புதைக்க குழி வெட்டிய போது திடிரென ஊற்று ஏற்பட்டு புதைப்பதற்காக தோண்றிய குழி முழுவதும் திடிரென தண்ணீர் நிரம்பியது. பிறகு தண்ணீரை வெளியேற்றி விட்டாலும் மீண்டும் புதைப்பதற்காக தோண்றிய குழி முழுவதும் திடீரென தண்ணீர் நிரம்பி விடுகிறது.

    இதன்பிறகு சடலத்தை தீ மூட்டி எறித்துவிட்டு உறவினர்கள் வெளியேறினர்.

    எனவே மக்களின் நலன் கருதி, இங்குள்ள மயானத்தை சுற்றிலும் மழைநீர் வடிகால் வசதி, சுற்றுச்சுவர், தகனமேடை மற்றும் தண்ணீர் டேங்க் உள் ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என அப்பகுதியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×