என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கல்லூரி மாணவியை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வட குரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவை சந்தித்து விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அச்சமடைந்த அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை என பல இடங்களில் தனது மகளை தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி எங்கே என தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவியை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரகண்டநல்லூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 500 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த பெரிய தம்பி மகன் தங்கராசு(வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன
    திருக்கோவிலூர் அருகே பாலியல் ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து 1098, 181 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் போலீஸ் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் திருமணம் தடு்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கோவிலூர் அருகே உள்ள தோப்புக்கச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ஏட்டுகள் கோகிலா, பிரபு, அமலா ஆகியோர் பெண்குழந்தைகள் திருமணம் தடு்ப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    மேலும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து 1098, 181 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து எடையூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    கடந்த ஆண்டு(2021) மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2,238 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 30 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். 218 திருட்டு வழக்குகள் பதிவானதில் 118 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களவுபோன ரூ.1 கோடியே 18 லட்சத்து 52 ஆயிரத்து 750 மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்ட பொருட்களில் ரூ.88 லட்சத்து 13 ஆயிரத்து 750 மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

    பழைய குற்றவாளிகள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் 319 பழைய குற்றவாளிகள் பிரிவு 110-ன் கீழ் 215 நன்னடத்தை பிணையம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 33 குற்றவாளிகளை பிரிவு 109-ன் கீழ் அமைதி காக்கும் வகையில் சம்பந்தப்பட்ட உட்கோட்ட நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்ற 14 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் சாராயம், வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 3,302 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,219 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 36,989 லிட்டர் சாராயம், 2,265 லிட்டர் எரிசாராயம், 3,45,951 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 8,370 கிலோ வெல்லம், 65,536 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 172 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 2020-ம் ஆண்டில் 891 வாகன விபத்துகள் நடைபெற்றது. இதில் 302 பேர் உயிரிழந்தனர். 1,021 காயமடைந்தனர். விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக 2021-ல் 1048 வாகன விபத்துகள் நடைபெற்றது. இதில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். 1,240 பேர் காயமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் 2021-ம் ஆண்டு வாகன விபத்தில் 58 உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது.

    சாலை விதிகளை மீறிய குற்றத்துக்காக ரூ.41 லட்சத்து 67,600 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2,238 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 174 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 189 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 253 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    27 லாட்டரி, 23 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்ற 14 ரவுடிகள் மற்றும் மதுவிலக்கு, கஞ்சா, லாட்டரி, மணல் கடத்தல் போன்ற குற்றசம்பங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 700 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காதது தொடர்பாக 29,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 4,150 இடங்கள் கண்டறியப்பட்டு, இதில் 3,250 இடங்களில் 4,059 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    அரசூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் குமரவேலு (வயது 27). கேபிள் டிவி ஆபரேட்டர். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு குமரவேலு அடிமையாகி இருந்ததால், பணத்தையும் அதிகளவில் இழந்து வந்துள்ளார்.

    இருப்பினும் ரம்மி சூது விளையாட்டில் இருந்து மீள முடியாத அவர், உறவினர்கள் பலரிடமும் கடனாக பணம் பெற்று விளையாடி வந்தார். இதன் மூலம் ரூ.4 லட்சம் வரைக்கும் பணத்தை இழந்துவிட்டார்.

    இந் த சூழ்நிலையில், கடந்த 30-ந்தேதி நகையை ஒரு கடையில் அடகுவைத்து அதன் மூலமாக ரூ.12 ஆயிரம் பெற்றுள்ளார். அந்த பணத்திலும் ரம்மி விளையாடி அவர், முழுவதையும் இழந்து விட்டார்.

    இதன் காரணமாக, மன அழுத்தத்தில் இருந்த குமரவேலு, நேற்று திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்று சுடுகாட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குமரவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருக்கோவிலூரில் கஞ்சா, புகையிலை விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் கீழையூர், சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் கீழையூர் சிவன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதேபகுதி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தாஸ் மகன் தாவீதுராஜா(வயது 23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முருகன் மகன் ஹரிஹரன்(26) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ராஜரத்தினம் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 260 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
    பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மாட்டோம் என கடந்த 6 மாத காலமாக தமிழக நிதித்துறை அமைச்சர் கூறுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
    கள்ளக்குறிச்சி:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

    பெட்ரோல்-டீசல் விலையானது ஜிஎஸ்டி-க்குள் வரவேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு கூறுகிறார். அதைத்தான் நாங்களும் சொல்கிறாம். ஆனால் கடந்த 6 மாத காலமாக இந்த மாநிலத்தின் நிதித்துறை அமைச்சர், ‘நாங்கள் கொண்டு வரமாட்டோம்’ என்கிறார்.

    இதுபற்றி பேசிய எம்.பி. டி.ஆர்.பாலு ‘அது தனி நபர் கருத்து. பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் வரவேண்டும் என கட்சி சார்பாக நான் சொல்கிறேன்’ என்கிறார். 

    உண்மையிலேயே திமுகவில் யார் சொல்வதை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்வது? டெல்லி பிரதிநிதியான எம்பி சொல்வதை எடுத்துக்கொள்வதா? மாநில நிதித்துறை அமைச்சர் சொல்வதை எடுத்துக்கொள்வதா? ஏன் மக்களை  குழப்புகிறீர்கள்?

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
    திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே ஆவியூர் தென்பெண்ணை ஆற்றில் 85 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள், இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றியதோடு, இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் ராஜன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(வயது 82) என்பதும், கடந்த 23-ந் தேதி திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள தனது மகளை பார்க்க வந்தவர், தென்பெண்ணையாற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர் அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம்(வயது 46). டீ மாஸ்டரான இவர் கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பம்ப் ஹவுஸ் ரோட்டில் அவர் தங்கி இருந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. 

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பாா்த்தபோது உடல் அழுகிய நிலையில் அருணாசலம் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதுபற்றிய தகவல்அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் அருணாசலம் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும்இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து அருணாசலத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 40). விவசாயியான இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன்(25) என்பவருக்கும் அங்குள்ள ஓடையில் மீன் பிடித்தபோது தகராறு ஏற்பட்டது.

    இதன் முன்விரோதம் காரணமாக அதே ஊரில் உள்ள முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ராஜேந்திரனை அங்கு வந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் வெட்டுக்காயம் அடைந்த ராஜேந்திரன் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி(வயது 40) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    கள்ளக்குறிச்சி பகுதி நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி அறிவுரை வழங்கினார்.
    கள்ளக்குறிச்சி:

    நகை மற்றும் நகை அடகுகடை உரிமையாளர்களுக்கு நகைகளை பாதுகாப்பது குறித்து காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கள்ளக்குறிச்சி துணை சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    நகைக்கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் கடையின் உள் மற்றும் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தி கண்காணிக்க வேண்டும். கடைக்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகைகள் வைக்கும் பெட்டக வசதி பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் காவலுக்கு வாட்ச்மேன் வைத்து பாதுகாப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நகைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் சுபாகரன், நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×