என் மலர்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்:
சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சேஷசமுத்திரம் கிராமத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சாராயம் விற்ற சுப்ரமணியன்(44), நெடுமானூரை சேர்ந்த கண்ணன்(42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் போலீசார் பிரம்மகுண்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தனூர் கால்வாய் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் தனது சொந்த வேலைக்காக நத்தாமூர் கிராமத்தில் இருந்து கிளியூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் கிளியூரிலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
கிளியூர் அருகே முனியப்பன் கோவில் பகுதி பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி பாலத்தில் இருந்த தடுப்பு கட்டையின் மீது வேகமாக மோதியது. இதில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள ஆண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 45) விவசாயி. இவருக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். இவரது 2 மகள்களையும் ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இவரது மகள்கள் திருமணத்திற்காக கண்ணையன் கடன் வாங்கினார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கடன் கொடுத்தவர்கள் கண்ணையன் வீட்டிற்கு வந்து கடனைத் திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு அவர் கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார்.
இதற்கு கடன் கொடுத்தவர்கள் மறுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணையன் தனது வீட்டிற்கு பின்னால் உள்ள நிலத்தில் இருந்த முந்திரி தோப்பில் உள்ள பலா மரத்தில் தனது கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் கண்ணையன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை மற்றும் கூத்தனூர் கிராமத்தில் கஞ்சா விற்ற தனுஷ் (வயது 19), உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த சுகுமார் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 550 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் போலீஸ் சரகம் திம்மலை புது காலனி பகுதியை சேர்ந்தவர் மாயவன். அவரது மகன் மகேந்திரன் (வயது 32) இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டதால் திம்மலையில் வந்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த மாதம் 22-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து இவரது தாய் கொளஞ்சியம்மாள் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மகேந்திரனை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 150 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில் குமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரபு, அழகுவேல் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அரசு, நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட சிறுபான்மை செயலாளர் ஜான்பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே ஆண்டி மூப்பர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 67) விவசாயி.
இவர் நேற்று சொந்த வேலையாக வீட்டில் இருந்து சைக்கிளில் தியாகதுருகம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆண்டி மூப்பர் கொட்டாய் அருகே சென்ற போது இவருக்கு பின்னால் வந்த மினி லாரி இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னசாமி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சின்னசாமி மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மினி லாரி ஓட்டுனர் உளுந்தூர்பேட்டை அருகே கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி முத்து என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு போலீஸ் சரகம் திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (57) விவசாயி. இவர் தெருவில் விளையாடி கொண் டிருந்த சிறுமியை தனது கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அந்த சிறுமியின் பாட்டி பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து கேசவன் சிறுமியின் பாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கடுவனூரைசேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் அரசு(வயது 40). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், வெங்கடேசன். இவர்கள் இருவருக்கும் இடையே இடம் பிரச்சினையால் முன்விரோதம் இருந்தது.
கடந்த 31-ந்தே தி அரசு குடும்பம் குறித்து வெங்கடேசன் குடும்பத்தினர் தரக்குறைவாகபேசினர். இதனைதட்டிக்கேட்ட அரசுவை , வெங்கடேசன், அவரது மனைவி அரசிளங்குமாரி, தாய் ராணி, மகள்கள் சவுந்தர்யா, கவுசல்யா, குமார் மனை விதங்கமணி, இவரது மகன் ஜெகதீஷ் ஆகியோர் தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், வெங்கடேசன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தகராறில் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசு, நேற்று காலை இறந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி , அரசிளங்குமாரி (40), ராணி(65), தங்கமணி(37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கடுவனூர் பகுதியில் பதற்றம் நிலவியதால் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பிரேத பரிசோதனை முடிந்து அரசுவின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும் உடலை அடக்கம் செய்யாமல் 300-க்கும் மேற்பட்டோர், நேற்று திருவண்ணாமலை சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தாசில்தார் பாண்டியன், டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
மணி கண்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் ராஜவேல், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வைத்தியநாதன், நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 53 ஊராட்சிகள் உள்ளன. இதில் 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பு தலைவராக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி ஜெயராமன் பிரசன்னா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக குஞ்சரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பாலாஜி , பொருளாளராக திருப்பேர் தக்கா மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல் துணைத்தலைவராக ஊராட்சி மன்ற தலைவர்கள் புகைப்பட்டி அங்கமுத்து, பெரும் குறுக்கை பாலகிருஷ்ணன், குன்னத்தூர் சிவா, துணை செயலாளராக பாலு ,வீரமங்கலம் நசீம், காத்து மலையனூர் ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினராக மூலசமுத்திரம் மகாலட்சுமி, மழவராயனூர் சுபா, பின்னலவாடி மணி, எலவனாசூர்கோட்டை நந்தகுமார், பல்லவாடி கோவிந்தன், ஜெயந்தி, பாலி சவுந்திர பாண்டியன், தனம், அனிதா குமாரமங்கலம், அமுதா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகி களுக்கு மணிகண்ணன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் பகுதியில் பூட்டை, புதுப்பாலப்பட்டு, பாச்சேரி, மோட்டாம்பட்டி பகுதியில் தற்போது மணல் கடத்தல் அதிகமாக நடக்கிறது. தொடர் வெயில் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் குறைந்ததால், மணல் கடத்துபவர்கள் ஆற்றிலிருந்து மணலை வாகனங்களில் கடத்தி செல்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






