என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் விவசாயி கைது

    சங்கராபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு போலீஸ் சரகம் திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (57) விவசாயி. இவர் தெருவில் விளையாடி கொண் டிருந்த சிறுமியை தனது கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அந்த சிறுமியின் பாட்டி பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து கேசவன் சிறுமியின் பாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்தனர்.
    Next Story
    ×