என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X
    கலெக்டர் தொடங்கி வைத்தார்

    கள்ளக்குறிச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    கள்ளக்குறிச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருத்து கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருத்து கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அருந்திடாதே, அருந்திடாதே, கள்ளச்சாராயம் அருந்திடாதே. ஒழித்திடுவோம், ஒழித்திடுவோம், போதைப்பொருட்களை ஒழித்திடுவோம். கள்ளச்சாராயத்தை ஒழிப்போம், நமது நாட்டு மக்களை காப்போம்.

    மற்றும் குடி குடியைக் கெடுக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கல்லூரி மாணவ- மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், மற்றும் தேசிய மாணவர்கள் படையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேரணி நகரத்தில் உள்ள முக்கியமான வீதிகள், கடை வீதிகள் வழியாக சென்று மந்தைவெளியில் நிறைவுற்றது. அப்போது உதவி ஆணையர் கலால் சுரேஷ், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர் (கலால்) ரவிச்சந்திரன், கோட்டகலால் அலுவலர் வாசுதேவன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஜய பிரபாகரன் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×