என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug Eradication Awareness"

    • சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • கல்லூரி மாணவ-மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தார்கள்.

    உடுமலை

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதைப் பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி கச்சேரி வீதி, கல்பனா ரோடு வழியாக மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அப்போது கல்லூரி மாணவ-மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    இதில் வக்கீல் சங்க தலைவா் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன் மற்றும் வக்கீல்கள், போலீசார், கல்லூரி முதல்வர் ஜெயகுமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×