என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தியாகதுருகம் அருகே மினி லாரி மோதி முதியவர் பலி

    தியாகதுருகம் அருகே மினி லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே ஆண்டி மூப்பர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 67) விவசாயி.

    இவர் நேற்று சொந்த வேலையாக வீட்டில் இருந்து சைக்கிளில் தியாகதுருகம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆண்டி மூப்பர் கொட்டாய் அருகே சென்ற போது இவருக்கு பின்னால் வந்த மினி லாரி இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னசாமி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து சின்னசாமி மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மினி லாரி ஓட்டுனர் உளுந்தூர்பேட்டை அருகே கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி முத்து என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×