என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி ஆனார்.
    • புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண் (வயது 19), தொழிலாளி.இவர் ரிஷிவந்தியம் பெரிய ஏரியில் குளித்தபோது திடீரென அவரை காணவில்லை என உடன் வந்தவர்கள் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தியாகதுருகம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி மாயமான அருணை தேடினர். ஆனால் அவரை காணவில்லை. பின்னர் நேற்று மீண்டும் தேடும் பணி தொடங்கியது. இதில் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து கிராமமக்களும் சேர்ந்து தேடினர்.

    அப்போது இறந்த நிலையில் அருணின் உடல் மீட்கப்பட்டது. பின் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது
    • பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை ஆகும்.

    கள்ளக்குறிச்சி:

    தனியார் பள்ளியில் மாணவிகளின் மர்ம மரணம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதுதான் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை ஆகும். அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    மர்மமான முறையில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அவரது இறப்புக்கு காரணமானவர்களுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    • தியாகதுருகம் அருகே 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
    • தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் துணை தலைவர் நெடுஞ்செழியன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் வரவேற்றார்.யூனியன் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி தலா 5 ஆடுகள் வீதம் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். அப்போது மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய அவைத் தலைவர் சாமிதுரை, துணைத்தலைவர் ராமலிங்கம், துணை செயலாளர் கணேசன், கால்நடை உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் கூத்தக்குடி கிராமத்தில் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.

    • திருநாவலூர் அருகே பார்சல் லாரி மற்றொரு லாரி மீது மோதி டிரைவர் கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (வயது 35) இவர் தனியார் பார்சல் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சேலத்தில் இருந்து சென்னை நோக்கி லாரியில் பார்சல் ஏற்றிக்கொண்டு வந்தார். அ ப்போது உளுந்தூ ர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடப்பட்டிருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பார்சல் லாரி மோதியது. பார்சல் லாரி வேகமாக வருவதைப் பார்த்த தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இதனால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் பார்சல் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோஜ்க்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே 11 பம்ப் செட்களில் மின்வயர்கள் மர்ம கும்பலால் திருடப்பட்டது.
    • திருடு போன ஒயரின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 20,000 என கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) விவசாயி, இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் மின் மோட்டார் அமைத்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.நேற்று காலை மணிகண்டன் தனது வயலுக்குச் சென்று நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பார்த்தபோது மர்ம நபர்கள் மின் மோட்டாரில் இருந்த வயரை வெட்டி திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் விசாரித்த போது இதே போல் சிறுவல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், வெங்கடேசன், தென்னரசு, பாண்டியன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட 9 பேருக்கு சொந்தமான 11 மின் மோட்டாரில் மர்ம நபர்கள் வயரை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடு போன ஒயரின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 20,000 என கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியநல்லூர், முடியனூர் உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் மின் மோட்டாரில் மர்ம நபர்கள் ஒயரைத் திருடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகதுருகம் பகுதியில் தொடர் மின் ஒயர் திருட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கோவிந்தன் மனைவி ஜோதி(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமாயின.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் கோவிந்தசாமி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் திடீரென்று கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார்.
    • செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் கடுவனுாரைச சேர்ந்தவர் செல்வம். அவரது 16 வயது மகள் பிளஸ்1 படித்து வருகிறார். இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை அதிர்ச்சி அடைந்த செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு ரதம் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கிஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • இவ்வாண்டின் கருப்பொ ருள் “குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னே ற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போ ம் என்பதாகும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் கருப்பொ ருள் "குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னே ற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போ ம் என்பதாகும் " இதில் விழிப்புணர்வு ரதம் மற்றும் தனியார் கல்லூரி மாண வர்களை கொண்டு மக்கள் தொகை கட்டு ப்பாட்டின் அவசியத்தை உணர்த்தும் விதமாக விழி ப்புணர்வு பதாகைகளை ஏந்தி செல்லும் விழிப்பு ணர்வு பேரணி ஆகியவைகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணி நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது. மேலும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டு ப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ரதம் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் ஜூலை 12 முதல் ஜீலை 24 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முதல்வர் உஷா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநர் பொது சுகாதாரப் பணிகள் ராஜா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ க்கண்காணிப்பாளர்நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • சங்கராபுரம் அருகே முன்னாள் யூனியன் தலைவர் வீட்டில் நகை, பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி ரோஜாவதி(வயது62). இவரது கணவர் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரிஷிவந்தியம் வடக்கு யூனியன் தலைவராக பதவி வகித்தவர். கடந்த ஓராண்டுக்கு முன் அவர் இறந்த நிலையில் ரோஜாவதி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூ ர்களில் வசிக்கின்றனர். ரோஜாவதி மூட்டு வலி காரணமாக கடந்த 2-ந் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவலறிந்த டி.எஸ்.பி., பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கைரேகை பிரிவு போலீசாருடன் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • தியாகதுருகம் சுற்று வட்டார பகுதிகளில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16- வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி கைலாசநாதர் கோவில், வடபூண்டி கைலாசநாதர் கோவில், வடதொரசலூர் பழமலை நாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • கள்ளக்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றார்.
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தங்கமணி என்பவர் கரூர் மாவட்டத்திற்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில்கள்ளக்குறிச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×