என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது28). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி அமுதா என்பவருக்கும் இடையே பொதுகிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமுதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவசக்தி, சாந்தி, கலியன் ஆகியோர் சேர்ந்து ஜெயராமனை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார், அமுதா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீஸ் துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது.
    • கொலையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

    எங்கள் கட்சியினர் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு வார காலம் மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை வரும் என அனுபவரீதியாக ஆலோசனை கூறினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் அந்த கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

    தமிழக போலீஸ் துறை ஒரு புகழ்பெற்றது. ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீஸ் துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்?, எதற்கு இந்த செய்திகளை வதந்தியாக பரப்பியிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்க வேண்டும். வன்முறையாளர்கள் பள்ளி உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகிற போது போலீஸ் துறை பயந்து ஓடுகிறது.

    போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றபோது இது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது. ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இந்த விஷயத்தில் அரசை பொறுத்த வரை எந்தவித உள்நோக்கமும் இல்லை. அரசினுடைய நோக்கம் உண்மையை கண்டறிவதில் உறுதியாக இருக்கிறார்கள்.

    அது கொலையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். தற்கொலையாக இருந்தால் குழந்தைகளின் மனநிலையை ஆராய வேண்டும். மாநிலம் முழுவதிலும் உள்ள கல்விக்கூடங்களில் மனநல ஆலோசகர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பஹ்ரைன் நாட்டில் தவித்த முதியவர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டார்.
    • இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 59), அவரது மனைவி நல்லம்மாள். இவர்களது மகள் சுந்தராம்பாள், மகன் மணிவேல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பச்சமுத்து 1991ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். விடுமுறைக்கு ஊருக்கு திரும்பி அவர் 1993 ஆம் ஆண்டு மீண்டும் பஹ்ரைன் நாட்டிற்க்கு சென்றார். அவ்வாறு பஹ்ரைன் சென்ற பச்சமுத்து கடந்த 1996 ஆம் ஆண்டு வரை தனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி நலம் விசாரித்து வந்தார். அதன் பிறகு அவரிடம் இருந்து குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பவில்லை. மேலும் அவரிடம் இருந்து கடிதம் வரும், வரும் என எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனாலும் தமிழகத்திலிருந்து பஹ்ரைன் நாட்டிற்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் அவ்வப்போது நல்லம்மாள் தனது கணவரை பார்த்தீர்களா? என விசாரித்து புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு வந்த நல்லம்மாள் தனது மகள் சுந்தராம்பாள் மற்றும் மகன் மணிவேல் ஆகியோர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் மூலம் கடந்த ஜனவரி மாதம் பச்சமுத்து என்பவர் பஹ்ரைன் நாட்டில் உள்ளதாக அவரது மகன் மணிவேலுக்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி மணிவேல் குடும்பத்தினர் தனது தந்தை பச்சைமுத்துவிடம் தொலைபேசி யில் வாட்ஸ் அப் மூலம் பேசினர். அப்போது பச்சமுத்து பஹ்ரைன் நாட்டில் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருவதாகவும், தான் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மணிவேல் தனது தந்தையை ஊருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி பார்வையாளராக பஹ்ரைன் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து தந்தையை அழைத்து வர முயற்சி செய்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விசா கிடைக்கவில்லை. தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வரும் தனது கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மகன் நாகராஜ் என்பவரை மணிவேல் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார். மேலும் பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பச்சமுத்து குறித்த உண்மை தன்மையை விசாரணை செய்து அறிக்கையாக மாவட்ட காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பக்ரைன் நாட்டில் உள்ள அன்னைத் தமிழ் மன்ற தலைவர் செந்தில்குமார், உலக வெளிநாட்டுவாழ் கூட்டமைப்பின் தலைவர் சுதீர், இந்திய தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்ஸவா ஆகியோரின் உதவியுடன் பச்சமுத்து தமிழகம் வந்தார். பச்சமுத்துவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அன்னை தமிழ் மன்றத்தின் செயலாளர் தாமரைக்கண்ணன் என்பவர் பச்சமுத்துவுடன் சென்னை விமான நிலையம் வரை வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அவரது மகன் மணிவேல் தனது தந்தையை காரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். சொந்த ஊருக்கு சென்ற பச்சமுத்துவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

    • 144 தடை உத்தரவு நீக்கம்: கள்ளக்குறிச்சியில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • சமூக இடை வெளியினை கடை பிடித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள க்குறிச்சி வட்டம் முழுவதும், சின்னசேலம் வட்டத்தில் சின்னசேலம் மற்றும் நயினார்பாளையம் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ங்களுக்கும் 18.07.2022 அன்று முதல் 31.07.2022 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு தற்போது விலக்கி கொள்ளப்பட்டது. அதன்படி கள்ள க்குறிச்சிமாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அன்று முதல் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்ப ற்றி பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அனிந்து, சமூக இடை வெளியினை கடை பிடித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    தியாகதுருகம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 36) கொத்தனார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் கவிதா (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் கவிதா தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக கடைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே குப்பைக்கு வைத்த தீ சேலையில் பற்றி எரிந்ததால் பெண் பலியானார்.
    • புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி வசந்தி (வயது 33) இந்நிலையில் வசந்தி தனது குழந்தைகளுடன் சுப்ரமணியபுரத்தில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வசந்தி வீட்டின் பின்புறம் தோட்டத்தில் உள்ள குப்பைகளை தீயிட்டு எரித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வசந்தியின் சேலையில் தீப்பற்றி எரிந்தது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தி இறந்து போனார்.

    இது குறித்து வசந்தியின் தாய் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரம் விற்பனை உரிமம் ரத்து என்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தகவல் தெரிவித்துள்ளார்.
    • அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து ள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களு பயிர் செய்து வருகிறது. மேலும் ஏற்க னவே உள்ள பயிர்க ளுக்கு விவசாயிகள் உர ங்கள்இட்டும் பராமரித்து வருகின்றனர். தற்சமயம் இம்மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1189 மெ.டன், டி.ஏ.பி 939 மெ.டன். பொட்டாஷ் 1421 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 889 மெ,டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 5362 மெ.டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசா யிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்ப த்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. மேலும் உர விற்பனை யாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது வழங்கிட வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது 1985- உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்வதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி பள்ளி சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியதாக சின்னசேலம் அருகே தகரை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (வயது 23) என்பவரையும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியது தொடர்பாக தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (22), வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28), கச்சிராபாளையம் அருகே மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த துரைபாண்டி (20), தியாகதுருகம் அருகே காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (18)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    • தியாகதுருகம் பகுதியில் விவசாயிகள் மானாவாரி கம்பு விதைத்து பயனடையலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • சத்தான சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெற்று சாகுபடி செய்யலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-தியாகதுருகம் பகுதியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு பருவத்தில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி கம்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது தியாகதுருகம் பகுதியில் பரவலாக சுமார் 100 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினை கொண்டு மானாவாரியாக சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது நிலத்தினை உழவு செய்து கம்பு விதைத்து பயனடையலாம். மேலும் மானாவாரி சாகுபடிக்குத் தேவையான தனசக்தி உயர் விளைச்சல் ரக கம்பு விதைகள் தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையம் 1,300 கிலோ இருப்பு உள்ளது. சிறுதானிய நுண்ணூட்ட உரம், உயிர் உரம் மற்றும் கம்பு விதைகளை சத்தான சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெற்று சாகுபடி செய்யலாம். கம்பு பயிர் 90 நாட்களில் அறுவடைக்கு வரும். கம்பில் உடலுக்கு அவசியமான அதிக அளவு இரும்பு, துத்தநாக நுண் சத்துக்கள் உள்ளது. எனவே விவசாயிகள் மானாவாரி பருவத்தில் கம்பு விதைத்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கராபுரம் அருகே தந்தை, மகளை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சந்தியா, தனது தந்தை வெங்கடேசனுடன் சென்று நகை, பணம் பறித்துச்சென்றது குறித்து முனுசாமியிடம் கேட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானகுமார் மனைவி சந்தியா(25). இவர் வீட்டின் அருகில் நடந்து சென்றபோது முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த முனுசாமி(46) என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தியாவிடம் இருந்த செல்போன், ரூ.6,500, 2 பவுன் நகையை பறித்துச்சென்றார். உடனே சந்தியா, தனது தந்தை வெங்கடேசனுடன் சென்று நகை, பணம் பறித்துச்சென்றது குறித்து முனுசாமியிடம் கேட்டார். ஆத்திரமடைந்த முனுசாமி, ஆதரவாளர்களுடன் சேர்ந்து சந்தியாவையும், வெங்கடேசனையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் முனுசாமி, அவரது ஆதரவாளர்களான சங்கர், பன்னீர், ஏழுமலை, மணி கண்டன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
    • தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி (வயது 17) மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 17-ந்தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர். இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டு, 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் நியமிக்கப்பட்டனர்.

    இவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் தனியார் பள்ளி முன்பும், கனியாமூர் நான்கு முனை சந்திப்பு, சின்னசேலம் சாலை பங்காரம் சாலை கச்சிராயபாளையம் சாலை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வன்முறையின் போது பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்தியதாக சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (24),கார்த்திக் (24) கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (20), கமல் ராஜ் (21), ஸ்ரீதர் (20), சத்தியமூர்த்தி (22), பாலமூர்த்தி (22), மற்றும் போலீஸ் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய கடலூர் மாவட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அதன்படி இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே மனநலம் பாதித்த வாலிபர் திடீரென இறந்தார்.
    • ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வெண்பிளான் இருந்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மனநல பாதிக்கப்பட்ட ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வெண்பிளான் இருந்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளார். கடந்த 17-ந் தேதி அன்று கனியாமூரில் நடந்த கலவரத்தால் அப்பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கலவரம் நடந்த அன்று முதல் இந்த ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வென்பிலானுடன் அப்பகுதியில் 4 நாட்களாக சுற்றி திரிந்துள்ளார். இவருக்கு உடல்நிலை மோசம் அடைந்ததால் சாலை ஓரத்திலே படுத்து கிடந்துள்ளார். இவரைப் பற்றி தகவல் தெரியாததால் அருகில் இருந்தவர்கள் சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இவர் இறந்து போனார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×