சின்னசேலம் அருகே கனியாமூர் கலவரத்தில் வாட்ஸ்அப் குழு அட்மின் உள்பட 4 பேர் கைது

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சின்னசேலம் அருகே கனியாமூர் கலவரத்தில் வாட்ஸ்அப் குழு அட்மின் உள்பட 4 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி பள்ளி சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியதாக சின்னசேலம் அருகே தகரை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (வயது 23) என்பவரையும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியது தொடர்பாக தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (22), வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28), கச்சிராபாளையம் அருகே மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த துரைபாண்டி (20), தியாகதுருகம் அருகே காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (18)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com