என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தந்தை, மகளை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு
- சங்கராபுரம் அருகே தந்தை, மகளை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சந்தியா, தனது தந்தை வெங்கடேசனுடன் சென்று நகை, பணம் பறித்துச்சென்றது குறித்து முனுசாமியிடம் கேட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானகுமார் மனைவி சந்தியா(25). இவர் வீட்டின் அருகில் நடந்து சென்றபோது முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த முனுசாமி(46) என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தியாவிடம் இருந்த செல்போன், ரூ.6,500, 2 பவுன் நகையை பறித்துச்சென்றார். உடனே சந்தியா, தனது தந்தை வெங்கடேசனுடன் சென்று நகை, பணம் பறித்துச்சென்றது குறித்து முனுசாமியிடம் கேட்டார். ஆத்திரமடைந்த முனுசாமி, ஆதரவாளர்களுடன் சேர்ந்து சந்தியாவையும், வெங்கடேசனையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் முனுசாமி, அவரது ஆதரவாளர்களான சங்கர், பன்னீர், ஏழுமலை, மணி கண்டன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






