என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
    • அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யிலுள்ள விவசாயிகள் ஏராளமானோர் தங்களது நெல்லை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் இங்கு வரும் விவசாயிகளிடம் அத்து மேரி அதிகாரமாக பணம் வசூல் செய்வதாக தெரியவருகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் வார்டு உறுப்பினர் முரளியிடம் சென்று ஏன் அதிகமாக பணம்வசூலிக்கிறாய் என்று கேட்டுள்ளார். 

    இதனால் இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறில் இருத ரப்பை சேர்ந்த வர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து பின்னர் இருத ரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும்அவர்களிடம் விசாரணைசெய்து வருகின்றனர். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    • சின்னசேலத்தில் பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • இந்த கட்டிட சுவர் மக்கள் நடமாடும் பொழுது அவர்களின் தலையில் அடிப்பட்டு உயிர் சேதம் ஆவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

    சின்னசேலம்,ஆக.4-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் மேல் பகுதியில் உள்ள சுவரில் பல இடங்களில் மரங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் கட்டிடம் முழுவதும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு அதாவது 2003-ம் ஆண்டு அப்பொழுது இருந்த மாவட்ட கலெக்டர் கோபால் தலைமையில் அதிமுக வின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத் உணவுத்துறை அமைச்சராக இருந்த பா. மோகன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. பழைய கட்டிடம் என்பதாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பேருந்து நிலையத்தின் கட்டிடத்தில் ஆங்காங்கே மரங்கள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பர்கத் உணவகம் கட்டிடத்தின் மேலே பெரிய அளவில் விரிசல் அடைந்திருக்கிறது.

    சின்னசேலம் பகுதி மக்கள், கிராம மக்கள் என தினமும் ஏராளமானோர் அவ்வழியாக சென்று வருகின்றனர். அதுபோக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்பை முடித்துவிட்டு பஸ் நிலையத்தில் இருந்து தான் அவரவர் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மரங்களால் விரிசல் ஏற்பட்ட கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம் என்ற அச்சத்தில் மக்கள் பேருந்து நிலையத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கட்டிட சுவர் மக்கள் நடமாடும் பொழுது அவர்களின் தலையில் அடிப்பட்டு உயிர் சேதம் ஆவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்ன தாகவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மரங்கள் வளர்ந்து விரிசல் அடைந்த இடத்தை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • தியாகதுருகம் அருகே முன் விரோதத்தில் தாக்குதலில் 7 பேர் காயமடைந்ததால் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சுவரை யாரோ உடைத்து விட்டதாக முருகனின் தந்தை பாவாடை திட்டியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை. இவரது மகன் முருகன் (வயது 45), அதே பகுதியைச் சேர்ந்த சடையன் என்பவரது மகன் சேகர் (40) இவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முருகன் அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே மினி டேங்க் கட்டியுள்ளார். அதில் கட்டியிருந்த சுவரை யாரோ உடைத்து விட்டதாக முருகனின் தந்தை பாவாடை திட்டியுள்ளார். இதனால் முருகன் தரப்பினரும், சேகர் தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, கம்பியால் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக தியாகதுருகம் போலீசில் புகார் செய்தனர். அதில் ஏழுமலை மனைவி பத்மினி (52) கொடுத்த புகாரின் பேரில் பாவாடை, அவரது மகன் முருகன், மனைவி காந்தம்மாள், உறவினர்கள் அன்னக்கிளி, சதீஷ், ராஜேந்திரன் ஆகிய 6 பேர் மீதும், இதேபோல் பழனிவேல் மனைவி அன்னக்கிளி (37) கொடுத்த புகாரின் பேரில் சடையன் மகன் சேகர், இவரது மனைவி கவுரி, உறவினர்கள் ஏழுமலை, இவரது மனைவி பத்மினிஆகிய 4 பேர் மீதும், ஆக மொத்தம் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதில் இரு தரப்பிலும் காயமடைந்த சேகர், பத்மினி, கௌரி, அன்னக்கிளி, முருகன், ராஜேந்திரன், பாவாடை ஆகிய 7 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சேகர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • கள்ளக்குறிச்சியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பணியிடங் களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை யின் சார்பாக அமைக்கப் பட்டுள்ள புகார் பெட்டியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் திறந்து வைத்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தின்கீழ் செயல்படும் வட்டார அளவி லான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் (10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அலுவலக உட்புகார் குழு அமைத்திட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணிபுரி யும் பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாலியல் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் வரும் புகார்களை கையாள தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உட்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஏற்கனவே இந்த வழக்கில் கைதான 103 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இந்த சம்பவத்தில் மாணவியின் மர்ம சாவு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த இரு சம்பவம் தொடர்பாக இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கலவர வழக்கு தொடர்பாக கடந்த 19-ந் தேதி கைதாகி கடலூர், வேலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் 2 பெண்கள் உள்பட 173 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்களை காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் அந்தந்த சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

    அதேபோல் நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவின்பேரில் கலவர வழக்கில் கைதான ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகிய 5 பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை நேற்று முடிந்ததை அடுத்து அவர்கள் 5 பேரை மீண்டும் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதான 103 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தியாகதுருகத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • வீட்டின் வராண்டாவில் செல்வியும், வீட்டில் உள்ள அறைகளில் மற்றவர்களும் தனித்தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கப்பன் (வயது 62) இவர் நேற்று இரவு தனது மனைவி செல்வி (58), மகன் குமார், மருமகள் பிரபாவதி ஆகியோரருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வராண்டாவில் செல்வியும், வீட்டில் உள்ள அறைகளில் மற்றவர்களும் தனித்தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் மரக்கதவை கடப்பாரையால் நெம்பி திறந்து வீட்டில் படுத்து இருந்த செல்வின் கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் அதில் இருந்த தாலி, குண்டு உள்ளிட்ட 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். அப்போது செல்வியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் எழுந்து வருவதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல் திறந்திருந்ததாகவும், அந்த ஜன்னல் வழியாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் செல்வி வீட்டில் படுத்து இருந்ததை பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து செல்வி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது மரக்கதவில் இருந்த தாழ்பாளை திறந்து விட்டு மர்ம நபர்கள் வீட்டில் பதுங்கிக் கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து செல்வி மீண்டும் வந்து படுத்த பிறகு மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் இருந்த நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர் ராஜா கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தார். மேலும் இது குறித்து தியாகதுருகம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 25 நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார்.
    • இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அருகே எட்ராப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மகன் இளையராஜா. இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேகிதா (வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.  கடந்த 30. 7. 22 அன்று மாலை தன்னுடைய மனைவிக்கு ஜாக்கெட் துணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர். பிறகு சின்னசேலம் அருகே உள்ள செல்லியபாளையம் என்ற கிராமத்தில் உள்ள ரயில்வே சப்வே பாலம் அருகே உள்ள கிணற்றில் இளையராஜா பிணமாக கிடந்து உள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இளையராஜாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் சின்னசேலம் போலீசார் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதபரிசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் இளையராஜாவின் தந்தை மாணிக்கம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மகனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் ஊராங்காணி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ஊராங்காணி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகே தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன்(வயது23) என்பவர் சாராயம் விற்றார். உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • 2 உடற்கூராய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தது.
    • ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு.

    கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள், குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்வதற்காக 2 உடற்கூராய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தது.

    ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
    • இறந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி இன்று காலை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களை சி,பி.சி.ஐ,டி. போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி சாந்தி விசாரணை இன்று (1-ந் தேதி) நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

    அதன்டி பேரில் ஜாமீன் மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி விசாரணையை 10-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதனிடையே இறந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி இன்று காலை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கூறி உள்ளார்.

    இந்த மனுவினை நீதிபதி சாந்தி ஏற்றுக்கொண்டார்.

    • தியாகதுருகம் அருகே பெரிய ஏரியில் தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவிலான நிலத்திற்கு தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. இந்த ஏரியில் மீன் வளர்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. அதன்படி குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பல்லகச்சேரி ஏரியிலிருந்து பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்த–தால் மீன் பிடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

    எனவே ஏரி கரையில் தற்போது உள்ள ஒரு மதுவில் தண்ணீரை திறந்து விட்டும், மற்றொரு இடத்தில் புதியதாக மது கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் வழியாக இரவு நேரங்களில் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றியும் மீன்களை பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு மீன்பிடிப்பதற்க்காக தண்ணீர் திறந்து விடுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படும் எனவும். மேலும் இவ்வாறு வெளி–யேறும் தண்ணீர் தற்போது கரும்பு பயிர்களில் தேங்கி கிடப்பதால் கரும்பு பயிர் வீணாகும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்க தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், ரவியை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் கீழ்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (20) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ×