search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complaint box"

    • 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.
    • புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    உடுமலை : 

    பள்ளிகளில் புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் பிரச்சினை என்னவென விசாரிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர், பெற்றோர், பெற்றோர் -ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் உள்ளிட்டோர் கொண்ட 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.

    இந்த குழு மாணவர் மனசு பெட்டியில் இடப்படும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து புகாரை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணும். நடப்பு கல்வியாண்டு கடந்த 12-ந்தேதி முதல் பள்ளிகள் செயல்படும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:- அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் பெட்டி வைக்க வேண்டும். கல்வியாண்டு துவங்கும் முன்பாகவே இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது. இப்பெட்டியில் சேர்க்கப்பட்ட புகார் அதற்கு காணப்பட்ட தீர்வு குறித்து ஆலோசனை கூட்டங்கள் வாயிலாக தலைமை ஆசிரியர்களிடம் விபரம் கேட்டறியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை நகரில் 50-க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் கட்டமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பெரும்பான்மையான பள்ளிகளில் கட்டமைப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. சில பள்ளிகளில் சிதிலமடைந்த கட்டமைப்புகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.

    சிங்கப்பூர் நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் தண்ணீர் தொட்டி, கழிப்பறை கதவுகள் சிதிலமடைந்து பல நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தரைதளம் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதியில் நிற்கிறது. பார்க்ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடியும் நிலையில் உள்ளது. இவ்வாறு கட்டமைப்பு சரியில்லாததால் பெற்றோரும் அப்பள்ளிகளின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

    நகராட்சி நிர்வாகத்தில் பொறியியல் பிரிவில் பணியிடங்கள் காலியாக இருப்பதும், பலரும் பொறுப்பு பதவிகளில் இருப்பதால் கட்டுமானபணிகள் பலவும் தாமதமாகிறது. இரண்டு மாதங்கள் விடுமுறை இருந்தும் பணிகள் முடிக்கப்படாமல், தாமதமாகி க்கொண்டிருப்பதால் பள்ளிகளில் இடையூறாக உள்ளது. மேலும் மாணவர்களுக்கு பாதகமான முறையில் கட்டமைப்பு பணிகள் அரைகுறையாக இருப்பதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    • கள்ளக்குறிச்சியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பணியிடங் களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை யின் சார்பாக அமைக்கப் பட்டுள்ள புகார் பெட்டியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் திறந்து வைத்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தின்கீழ் செயல்படும் வட்டார அளவி லான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் (10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அலுவலக உட்புகார் குழு அமைத்திட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணிபுரி யும் பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாலியல் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் வரும் புகார்களை கையாள தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உட்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • நீதித்துறை மற்றும் போலீ சார் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான புகார் பெட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முரளி தரன், தலைமையில் நடைபெற்றது.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், நீதித்துறை மற்றும் போலீ சார் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்க ளுக்கான புகார் பெட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முரளி தரன், தலைமையில், மாவட்ட தலைமை குற்றவி யல் நீதித்துறை நடுவர் கோபிநாத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு சட்ட செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தெரி வித்ததாவது:-

    மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க ப்பட்டு, பெறப்படும் புகார்கள் மீது தொடர்ந்து நீதித்துறை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் கண்காணித்து, குற்ற பிரிவுகள் இருந்தால் காவல்துறையினருக்கும், மனநலம் குறித்த பிர ச்சினைகள் இருந்தால் அதனை மன நல மருத்துவர்களுக்கும், மேலும் இதர புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து உரிய தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இப்புகார் பெட்டியின் மூலம் பெறப்படும் புகார் மீது ரகசியம் காக்கப்படும்.

    மாணவ, மாணவியர்கள் தங்களது பாதிப்புகள் மட்டுமின்றி தங்களைச் சார்ந்தவர்களுக்கான பாதிப்புகள் இருந்தாலும் இப்புகார் பெட்டிகள் மூலம் தெரிவித்திடலாம். இப்புகார் பெட்டியானது மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இதனை மாணவ, மாணவி யர்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

    அனைவருக்கும் பாது காப்போம் - அனைவரையும் பாதுகாப்போம் என்பதனை கருத்தில் கொண்டு, இப்புகார் பெட்டியில் மாணவ, மாணவியர்கள் தங்களது மனதிலுள்ள குறைகளை ெதரியப்படுத்தி, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்வின் போது, முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மேல ப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக புகார் பெட்டி அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் பல்வேறு புகார்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் புகார் குறித்து மனுக்கள் வழங்க தயங்கிவந்தனர்.

    தற்போது பொதுமக்கள் தயக்கம் இன்றி புகார் மனுக்கள் வழங்கும் வகையில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் மனு வழங்க வசதியாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் மேற்பார்வையில் கிணத்துக்கடவு பகுதியில் கிணத்துக்கடவு, சொக்கனூர், அரசம்பாளையம், நல்லட்டிபாளையம், கோவில் பாளையம், நெம்பர்.10.முத்தூர் உள்ளிட்ட 17 தாய் கிராமங்களில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் புகார் பெட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் கூறியதாவது:-

    பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் 100 தாய்கிராமங்கள் உள்ளன. இந்த தாய்கிராமங்கள் அனைத்தும் கண்காணிக்க அந்ததந்த போலீஸ் நிலையங்களின் எல்லையில் உள்ள போலீசார் தனியாக ஈடுபட உள்ளனர்.

    மேலும் அந்தந்த போலீஸ் நிலைய எல்லையில் உள்ள தாய் கிராமங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக புகார் பெட்டி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த புகார் பெட்டியில் அந்தந்த தாய் கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் செல்போன் எண்களும் எழுதப்பட்டிருக்கும்.

    இந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் அதையும் புகார் மனுவாகவும், தொலைபேசியிலும் தெரிவிக்கலாம்.

    புகார் கூறுபவர்களின் பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதேபோல் தினசரி புகார் பெட்டி திறக்கப்பட்டு அந்த மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    கிராம பகுதிகளில் புகார் பெட்டி அமைக்கும் பணிகள் பேரூர் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் அனைத்தும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் முழுவதும் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×