search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் புகார்பெட்டி மாணவர்களை காக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக அமையும் கலெக்டர் பேச்சு
    X

    புகார்பெட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உள்பட பலர் உள்ளனர்.

    பள்ளிகளில் புகார்பெட்டி மாணவர்களை காக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக அமையும் கலெக்டர் பேச்சு

    • நீதித்துறை மற்றும் போலீ சார் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான புகார் பெட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முரளி தரன், தலைமையில் நடைபெற்றது.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், நீதித்துறை மற்றும் போலீ சார் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்க ளுக்கான புகார் பெட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முரளி தரன், தலைமையில், மாவட்ட தலைமை குற்றவி யல் நீதித்துறை நடுவர் கோபிநாத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு சட்ட செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தெரி வித்ததாவது:-

    மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க ப்பட்டு, பெறப்படும் புகார்கள் மீது தொடர்ந்து நீதித்துறை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் கண்காணித்து, குற்ற பிரிவுகள் இருந்தால் காவல்துறையினருக்கும், மனநலம் குறித்த பிர ச்சினைகள் இருந்தால் அதனை மன நல மருத்துவர்களுக்கும், மேலும் இதர புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து உரிய தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இப்புகார் பெட்டியின் மூலம் பெறப்படும் புகார் மீது ரகசியம் காக்கப்படும்.

    மாணவ, மாணவியர்கள் தங்களது பாதிப்புகள் மட்டுமின்றி தங்களைச் சார்ந்தவர்களுக்கான பாதிப்புகள் இருந்தாலும் இப்புகார் பெட்டிகள் மூலம் தெரிவித்திடலாம். இப்புகார் பெட்டியானது மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இதனை மாணவ, மாணவி யர்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

    அனைவருக்கும் பாது காப்போம் - அனைவரையும் பாதுகாப்போம் என்பதனை கருத்தில் கொண்டு, இப்புகார் பெட்டியில் மாணவ, மாணவியர்கள் தங்களது மனதிலுள்ள குறைகளை ெதரியப்படுத்தி, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்வின் போது, முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மேல ப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×