search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்

    பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்க கோரிக்கை

    • 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.
    • புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    உடுமலை :

    பள்ளிகளில் புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் பிரச்சினை என்னவென விசாரிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர், பெற்றோர், பெற்றோர் -ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் உள்ளிட்டோர் கொண்ட 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.

    இந்த குழு மாணவர் மனசு பெட்டியில் இடப்படும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து புகாரை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணும். நடப்பு கல்வியாண்டு கடந்த 12-ந்தேதி முதல் பள்ளிகள் செயல்படும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:- அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் பெட்டி வைக்க வேண்டும். கல்வியாண்டு துவங்கும் முன்பாகவே இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது. இப்பெட்டியில் சேர்க்கப்பட்ட புகார் அதற்கு காணப்பட்ட தீர்வு குறித்து ஆலோசனை கூட்டங்கள் வாயிலாக தலைமை ஆசிரியர்களிடம் விபரம் கேட்டறியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை நகரில் 50-க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் கட்டமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பெரும்பான்மையான பள்ளிகளில் கட்டமைப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. சில பள்ளிகளில் சிதிலமடைந்த கட்டமைப்புகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.

    சிங்கப்பூர் நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் தண்ணீர் தொட்டி, கழிப்பறை கதவுகள் சிதிலமடைந்து பல நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தரைதளம் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதியில் நிற்கிறது. பார்க்ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடியும் நிலையில் உள்ளது. இவ்வாறு கட்டமைப்பு சரியில்லாததால் பெற்றோரும் அப்பள்ளிகளின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

    நகராட்சி நிர்வாகத்தில் பொறியியல் பிரிவில் பணியிடங்கள் காலியாக இருப்பதும், பலரும் பொறுப்பு பதவிகளில் இருப்பதால் கட்டுமானபணிகள் பலவும் தாமதமாகிறது. இரண்டு மாதங்கள் விடுமுறை இருந்தும் பணிகள் முடிக்கப்படாமல், தாமதமாகி க்கொண்டிருப்பதால் பள்ளிகளில் இடையூறாக உள்ளது. மேலும் மாணவர்களுக்கு பாதகமான முறையில் கட்டமைப்பு பணிகள் அரைகுறையாக இருப்பதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×