திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் மோதல்

திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் மோதல்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யிலுள்ள விவசாயிகள் ஏராளமானோர் தங்களது நெல்லை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் இங்கு வரும் விவசாயிகளிடம் அத்து மேரி அதிகாரமாக பணம் வசூல் செய்வதாக தெரியவருகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் வார்டு உறுப்பினர் முரளியிடம் சென்று ஏன் அதிகமாக பணம்வசூலிக்கிறாய் என்று கேட்டுள்ளார். 

இதனால் இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறில் இருத ரப்பை சேர்ந்த வர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து பின்னர் இருத ரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும்அவர்களிடம் விசாரணைசெய்து வருகின்றனர். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com