search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்னசேலம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவி தாய் மனுத்தாக்கல்
    X

    சின்னசேலம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவி தாய் மனுத்தாக்கல்

    • பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
    • இறந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி இன்று காலை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களை சி,பி.சி.ஐ,டி. போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி சாந்தி விசாரணை இன்று (1-ந் தேதி) நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

    அதன்டி பேரில் ஜாமீன் மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி விசாரணையை 10-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதனிடையே இறந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி இன்று காலை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கூறி உள்ளார்.

    இந்த மனுவினை நீதிபதி சாந்தி ஏற்றுக்கொண்டார்.

    Next Story
    ×