கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 25 நாளில் புதுமாப்பிள்ளை மர்ம சாவு

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 25 நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார்.இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர்.
இளையராஜா
இளையராஜா
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி அருகே எட்ராப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மகன் இளையராஜா. இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேகிதா (வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.  கடந்த 30. 7. 22 அன்று மாலை தன்னுடைய மனைவிக்கு ஜாக்கெட் துணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர். பிறகு சின்னசேலம் அருகே உள்ள செல்லியபாளையம் என்ற கிராமத்தில் உள்ள ரயில்வே சப்வே பாலம் அருகே உள்ள கிணற்றில் இளையராஜா பிணமாக கிடந்து உள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இளையராஜாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் சின்னசேலம் போலீசார் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதபரிசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் இளையராஜாவின் தந்தை மாணிக்கம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மகனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com