என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் கிராமம் மேட்டுதெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 75). இவர் மாகரல் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஆனந்தன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் ஓரிக்கையை சேர்ந்த மோகேஷ் (21) என்பவரை கைது செய்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,256 ஆக அதிகரித்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,256 ஆக அதிகரித்துள்ளது.




    படப்பை அருகே என்ஜினீயர்களை தாக்கி செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுப்பேர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). சென்னை தேனாம்பேட்டை ராஜா நாயக்கன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (37). சிவில் என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் படப்பையை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரில் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முடிச்சூர் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு டிபன் சாப்பிட சென்றுவிட்டு திரும்பி ராயப்பா நகர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் இடித்தனர். இதனை தட்டிக்கேட்ட சுரேசை கையால் தாக்கியதுடன், கத்தியால் வெட்டினர். பார்த்தசாரதிக்கும் லேசான வெட்டு விழுந்தது. சுரேஷ் மற்றும் பார்த்தசாரதி இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சககட்டிட தொழிலாளர்கள் தடுத்தனர். அதில் சேட்டு என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் 4 பேரும் சுரேசிடம் இருந்த செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், பார்த்தசாரதியிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்றுவிட்டனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (27), சென்னை பெரம்பூரை சேர்ந்த தீனா (25), கூடுவாஞ்சேரியை சேர்ந்த நீலகண்டன் (23), மாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    தாம்பரம் அருகே கஞ்சா கேட்ட தகராறில் பெயிண்டரை வெட்டிக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 35). பெயிண்டர். இவரது நண்பர் பதுவஞ்சேரியை சேர்ந்த ராஜேஷ் (37). இவர்கள் இருவருக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா புகைத்து கொண்டிருந்த ராஜேஷிடம், ரவி கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் ரவி ராஜேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து, ரவியை ஓட,ஓட விரட்டி வெட்டினார்.

    இதைப்பார்த்து தடுக்க வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் உயிருக்கு பயந்து ஓடிவிட்டார். இதற்கிடையில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி பீர்க்கண்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக் இருந்த ராஜேசை கைது செய்தனர்.
    காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,453 ஆக அதிகரித்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,453 ஆக அதிகரித்துள்ளது.

    திருமணம் ஆன 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகர், 12-வது தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மகள் அக்‌ஷயா(வயது 29). இவருக்கும், பெருங்களத்தூரைச்சேர்ந்த குருபிரசாத்(31) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

    திருமணமான ஒரே மாதத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கணவருடன் கோபித்துக்கொண்டு அக்‌ஷயா ஆதம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    கணவன்-மனைவி இருவரையும் சமரசம் செய்து மீண்டும் சேர்த்து வைக்க அவரது பெற்றோர் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் அக்‌ஷயா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் எழுந்த அவரது பெற்றோர், தங்கள் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆதம்பாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய அக்‌ஷயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வரதட்சணை கொடுமை காரணமாக அக்‌ஷயா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அவருடைய கணவர் குருபிரசாத்திடம் விசாரித்து வருகின்றனர்.

    அக்‌ஷயாவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
    காஞ்சிபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் முசரவாக்கம் கிராமம் சடயவிநாயகபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் உமாபதி (52). கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் பாலுச்செட்டிசத்திரத்தில் இருந்து முசரவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். யுவராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.

    பாலுச்செட்டிசத்திரம் பை-பாஸ் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது ஒரு மோட்டார்சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் உமாபதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யுவராஜ் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோதிய மோட்டார்சைக்கியில் வந்த வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வெங்கடாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), காட்பாடி தாலுகாவை சேர்ந்த குணசேகரன் (29) இருவரும் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,090 ஆக அதிகரித்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,090 ஆக அதிகரித்துள்ளது.


    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,791 ஆக உயர்ந்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,791 ஆக உயர்ந்துள்ளது.

    இருங்காட்டுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியில் மேலாளர் நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்களுடன் வங்கியை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு இரும்பு ராடுடன் வந்த நபர் ஒருவர் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று வங்கியில் உள்ள லாக்கரை இரும்பு கம்பியால் உடைக்க முறபட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனையடுத்து எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத்துவங்கியதும் கொள்ளையடிக்க வந்த நபர் வந்த வழியே தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து வங்கிக்கு வந்த ஊழியர்கள் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 164 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் வாகனங்களுக்கு பயன்படுத்தும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் காரணமின்றி தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குகிறது. சம்பளத்தை அதிகரித்து வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை இருங்காட்டுகோட்டையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    மறியல் போராட்டதில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 164 பேரை போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

    குன்றத்தூரில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது குன்றத்தூர் முருகன் கோவில் பின்பகுதியில் உள்ள குளத்தின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் குன்றத்தூர், மணிகண்டன் நகரைச் சேர்ந்த நாகு என்ற நாகராஜ் (வயது 21), கார்த்திக் (37) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×