என் மலர்
காஞ்சிபுரம்
துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அட்டை பெட்டியில் ரூ.78 லட்சம் மதிப்புடைய 1½ கிலோ தங்க காகிதங்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அட்டை பெட்டியில் ரூ.78 லட்சம் மதிப்புடைய 1½ கிலோ தங்க காகிதங்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா ஊரடங்கால் துபாயில் சிக்கி தவித்த இந்தியர் களை ‘வந்தே பாரத்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறப்பு விமானம் ஒன்று அழைத்து கொண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. விமானத்தில் வந்தவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை சோதனைகள் முடிந்து வெளியே வந்தபோது, விமானத்தில் வந்திறங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்கவரின் உடைமைகள் வந்திருந்தது. இதை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் கொண்ட அட்டை பெட்டி இருந்தன.
அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் தங்கத்தை காகிதங்களாக மாற்றி யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க கார்பன் பேப்பருடன் சுற்றி படுக்கை விரிப்புகளில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சுமார் ரூ.78 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 450 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள கள்ளக்குறிச்சி வாலிபரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலியான வழக்கில் சாயத்தொழிற்சாலை உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற லட்சுமணன், விஷ வாயு தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற சுனில் என்பவரும் விஷவாயு தாக்கி இறந்தார்.
இதுபற்றி வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சாயத்தொழிற்சாலை உரிமையாளர்களான பாலாஜி (வயது 52), ரவிக்குமார் (54), சீனிவாசன் (44), ஆறுமுகம் (41), ஜெயக்குமார் (55) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சில்வர் தட்டுகளுக்கு இடையில் மறைத்து ரூ.38½ லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக ஒருவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய கூரியரில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூரியர் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சில்வர் தம்ளர்கள், தட்டுகள் போன்ற பொருட்கள் இருப்பதாக ஒரு பார்சல் இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர்.
அந்த பார்சலில் இருந்த சில்வர் தட்டுகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடை கொண்டதாக இருந்தது. பரிசோதனை செய்ததில் 2 தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக இணைக்கப்பட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் 2 தட்டுகளையும் பிரித்து பார்த்தபோது, தட்டுகளுக்கு இடையே இங்கிலாந்து நாட்டு பவுண்ட் கரன்சிகளை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.
ரூ.38 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 40 ஆயிரம் பவுண்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கூரியர் பார்சல் அனுப்பியதாக சென்னையை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையில் சாலையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஷவாயு தாக்கி உயிரிழந்த லட்சுமணன், சுனில் ஆகிய 2 தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கழுக்குன்றம் அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்பாக்கம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொல்லமேடு முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காசி. இவரது மனைவி அமிர்தம் (வயது 58). காசியின் தம்பி ரங்கநாதன். வீட்டுமனை தொடர்பாக காசிக்கும், ரங்கநாதனுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அமிர்தம் தனது ஆடு, மாடுகளை ரங்கநாதனின் வயலில் மேய்ச்சலுக்கு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரங்கநாதனின் மனைவி சந்திரா (48), அமிர்தம் மற்றும் அவரது கணவர் காசியிடம் சென்று, “எங்கள் வயலில் ஏன் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளர்கள்?” என்று கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சந்திராவின் மகன் சரவணன் (22) அங்கு வந்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சந்திராவும், அவரது மகன் சரவணனும் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் அமிர்தம் மற்றும் காசியை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமிர்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காசி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று அமிர்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 203 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,499 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 2,89,787 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, சேலம், கோவை, கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 203 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,499 ஆக அதிகரித்துள்ளது.

குன்றத்தூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். பெண் காயம் அடைந்தார்.
பூந்தமல்லி:
போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 27), என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு ஆன்லைனில் வகுப்பு நடத்தி கொண்டிருந்தார். இவரது தோழி ஸ்ரீவிஜயா. நேற்று வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் விக்னேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ஸ்ரீவிஜயா காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காயம் அடைந்த ஸ்ரீவிஜயா சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் தூசி பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 44). இவர், தனது மோட்டாார்சைக்கிளில் வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். புஞ்சையரசந்தாங்கல், திருவள்ளுவர் குடியிருப்பு பகுதி அருகே சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட முருகானந்தம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
வாலாஜாபாத் அருகே மது பாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
வாலாஜாபாத்தை அடுத்த முத்தியால்பேட்டை- களியனூர் சாலையில் உள்ள நத்தப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த துரைவேல் (வயது 45), பார்த்திபன் (31), ரமேஷ் (32) ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். 816 மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அனுமதியின்றி கூடிய 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர்:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி கொண்டாடுவது வழக்கம். அதே போன்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ராஜீவ் அமைதி ஜோதியை ஆந்திரா, கர்நாடகா வழியாக டெல்லிக்கு எடுத்துச்சென்று சோனியாகாந்தியிடம் ராஜீவ்காந்தி பிறந்த நாளான 20-ந்தேதி ஒப்படைத்து வந்தனர்.
இந்த நிலையில் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராஜீவ்காந்தி அமைதி ஜோதியை எடுத்துச்செல்ல கர்நாடகம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு ஒன்று கூடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
அதில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து அவர்கள் அமைதி ஜோதியை எடுத்து செல்வதற்கான அனுமதி கடிதம் வைத்திருந்ததும், அதில் 3 பேருக்கு மட்டுமே அனுமதி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,006 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 130 பேருக்கு கொரோனா உறுதியானதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,006 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 10,853 பேர் குணமடைந்துள்ளனர். 2,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாங்காடு அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பூந்தமல்லி:
குன்றத்தூர் கருமாரியம்மன் நகர் பவானியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவா (வயது 21). இவரது நண்பர் ரவிக்குமார் (21). நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடி விட்டு இரவு பூந்தமல்லி சென்று வருவதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார். பின்னால் தேவா அமர்ந்து இருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை மாங்காடு அடுத்த தெற்கு மலையம்பாக்கம் அருகே செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தேவா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ரவிக்குமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.