என் மலர்
செய்திகள்

விபத்து பலி
காஞ்சிபுரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: ஒருவர் பலி
காஞ்சிபுரம் அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் தூசி பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 44). இவர், தனது மோட்டாார்சைக்கிளில் வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். புஞ்சையரசந்தாங்கல், திருவள்ளுவர் குடியிருப்பு பகுதி அருகே சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட முருகானந்தம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story






