என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்:
மயிலாப்பூரை சேர்ந்தவர் முகிலன். இவர் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான மரக்காணத்தில் குடியேறுவதற்காக வீட்டுப் பொருட்களை எடுத்து செல்லும் வேலையை நங்கநல்லூரில் உள்ள டிரான்ஸ்போட் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.
நேற்று இரவு சரக்கு வேனில் அவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிஷின், ஏர்கூலர், மிக்சி, கிரைன்டர், கட்டில், ஷோபா, பித்தளை பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சரத் என்ற டிரைவர் உட்பட 4 வாலிபர்கள் வாகனத்தில் ஏற்றினர்.
பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் புறவழிச்சாலை அருகே வந்த போது சரக்கு ஆட்டோவில் தீடிரென தீப்பிடித்தது.
உடனடியாக பூஞ்சேரி டோல்கேட் அருகே வண்டியை நிறுத்தி விட்டு தீயைஅனைக்க முயன்றனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
உடனடியாக டிரைவர் உள்பட 4 வாலிபர்களும் அங்கிருந்து தள்ளி நின்றனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
எனினும் சரக்கு ஆட்டோவில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. சரக்கு ஆட்டோவில் தீ பற்றியதும், டிரைவர் உள்பட 4 பேரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகினர் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்ககூடிய ஒன்றாகும்.
திரையிசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராக விளங்கினார். பல பக்தி பாடல்களை பாடி மக்களிடையே பக்தி மணம் பரப்பியவர்.
காஞ்சி சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை மடத்திற்கு வேத நாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக கொடுத்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மகாத்ரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வர சாமியை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட் பகுதியில் சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரது குடோன் உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைத்து, தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகிறது.
நேற்று காலை இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் குடோன் முழுவதும் தீ பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து கிண்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. குடோன் முழுவதும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு குடோனில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. குடோனின் அருகில் உள்ள மின் கம்பங்களில் இருந்த மின்சார வயர்கள் தீயில் கருகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிகளவில் குடோன்கள் செயல்பட்டு வருவதால் தீ விபத்துகளும், கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் பிரைட் ஷாம் (வயது 14), 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிரைட் ஷாம் திடீரென அறைக்குள் சென்றவன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அறைக்குள் பார்த்தனர்.
அப்போது பிரைட் ஷாம் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரைட் ஷாமை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பரத் விசாரணை செய்ததில் வீட்டில் இருந்த டி.வி.யை பிரைட் ஷாம், சானிடைசர் கொண்டு துடைத்தபோது டி.வி பழுதடைந்து உடைந்து விட்டதாகவும், பெற்றோர் திட்டுவார்களே என்ற அச்சத்தில் பிரைட் ஷாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவனது பெற்றோரிடம் கேட்டபோது வயிற்று வலியால் பிரைட் ஷாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் புதர் மண்டி வறண்டு கிடந்த நீர்நிலைகளை தூர்வாரி மீட்டெடுத்து புத்துயிர் அளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் இஸா ஏரியில் விவசாயிகள் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் 42 ஏரிகள் தூர்வாரப்பட்டன. 2-வது கட்டமாக 2017-18-ம் ஆண்டில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 27 ஏரிகளும், 2 பெரிய வாய்க்கால்களும் சீரமைக்கப்பட்டன. 3-வது கட்டமாக 2019-20-ம் ஆண்டில் ரூ.15 கோடியே 22 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 38 ஏரிகள் தூர்வாரப்பட்டன.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.25 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 107 ஏரிகள், 2 பெரிய வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 17 ஆயிரத்து 805.70 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 4-வது கட்டமாக 29 ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்காக தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி அன்று ரூ.17 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏரிகளின் கரை பலப்படுத்தும் பணிகள், மதகு மறுசீரமைத்தல், நீர் உள்வாங்கியை மறு சீரமைத்தல் மற்றும் வரவுக்கால்வாயை தூர்வாருதல் ஆகிய பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இப்பணிகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் இந்த ஏரிகள் மூலம் 5 ஆயிரத்து 908.12 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பெரிய ஏரி, பரந்தூர் புதுத்தாங்கல் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் பி.பொன்னையா நேற்று நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி, உதவி செயற்பொறியாளர் க.விஜயகுமார், உதவி பொறியாளர் எஸ்.பாஸ்கரன், இளம்பொறியாளர் சி.மார்கண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு தபால் சரக்கக பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது.
அந்த பார்சலில் கொரோனா மருந்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த பார்சலை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகம் அடைந்து அவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட விலையுர்ந்த 130 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சென்னையில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது அது கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக பூட்டியே கிடப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் போதை பொருட்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கொலை, வழிப்பறி, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 20 ரவுடிகளை கோவா மாநிலத்தில் போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட சுமார் 61 வழக்குகளும் உள்ளன.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடிகளாக வலம் வந்து காஞ்சிபுரத்தில் உள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி பணம் பறித்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இருவரும் இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரிய காஞ்சிபுரம் போலீசார் 2 பேரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த ஜூன் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த 2 ரவுடிகளும் சுமார் 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து தொடர்ந்து பொதுமக்களை, வணிக நிறுவனர்களை தொலைபேசி மூலம் மிரட்டியும், கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். காஞ்சிபுரம் ரவுடி கும்பல் சென்னை, கடலூர், திருவள்ளூர் போன்ற மாவட்டத்தில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.
எனவே வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பி.நாகராஜன் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா மேற்பார்வையில் தனிப்படைகள் மராட்டியம், கோவா உள்பட பல மாநிலங்களில் ரவுடிகள் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
இந்த நிலையில், கோவா மாநிலத்தில் உள்ள வெவ்வேறு ஓட்டல்களில் பதுங்கி இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளான தினேஷ்குமார் (39), தியாகு (29), ராஜா (24), அருண்குமார் (21) உள்பட 15 பேரும், கடலூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியான சுரேந்தர் (37), திருவள்ளூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த செங்குன்றம், காந்தி நகரைச் சேர்ந்த ரவுடிகளான சேதுபதி (26), சுகேஸ்வரன் (30) மற்றும் செங்கல்பட்டு சேலையூரை சேர்ந்த காந்தி (37) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து எந்தவித ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை.
மேலும், இதில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியான தியாகு, தினேஷ் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ரவுடி தியாகு 6 முறை குண்டர் சட்டத்திலும், தினேஷ் 4 முறை குண்டர் சட்டத்திலும் ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 109 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் சில ரவுடிகளை விரைவில் கூண்டோடு கைது செய்வோம். செங்கல்பட்டில் 176 ரவுடிகளை கைது செய்துள்ளோம். திருவள்ளூர் மாவட்டத்தில் 88 ரவுடிகளை கைது செய்துள்ளோம். ஆக மொத்தம் 373 ரவுடிகளை கைது செய்துள்ளோம்.
காஞ்சிபுரத்தில் அடிக்கடி பொதுமக்களை மிரட்டியும், கொலை, கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது என்கவுண்ட்டர் பாயுமா என்ற கேள்விக்கு, தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கும் பொதுமக்கள், நில விற்பனையாளர்கள், நில உரியமையாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் மேற்படி ரவுடிகளை கூண்டோடு கைது செய்த தனிப்படையினரை உயர் அதிகாரிகள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.






