என் மலர்
காஞ்சிபுரம்
படப்பை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் காந்தி நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு அருணா (28) என்ற மனைவியும், கணேஷ் (5), ஹேமந்த் (3) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சதீஷ்குமார் படப்பையில் இருந்து காவனூர் பகுதிக்கு சென்று ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக இடங்களை பார்த்து விட்டு மீண்டும் மாலை ஒரத்தூர் வழியாக படப்பை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை ராமு (32) ஒட்டி வந்தார்.
அவர்களுடன் ஆறுமுகம் (42), ராஜா ஆகியோரும் காரில் வந்தனர். ஒரத்தூர் மேம்பாலத்தில் வரும்போது தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் சதீஷ்குமாரின் காரை வழி மறித்து நிறுத்தினர்.
காரில் இருந்து சதீஷ்குமார் கீழே இறங்கினார். அப்போது மர்ம நபர்கள் உன்னிடம் பேச வேண்டும் வா என்று அழைத்தனர். மேம்பாலம் நடுவில் அழைத்து சென்றதும் கத்தி, அரிவாள் போன்றவற்றால் சதீஷ்குமரை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்த சதீஷ்குமாருடன் வந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
கொலைக்கு தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாய் கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த கோடி தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சத்தியன் (வயது 24). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தாயிடம் கூறினார். மது குடிப்பதை கண்டித்த அவரது தாயார் முதலில் குடி பழக்கத்தை நிறுத்து. அதன் பின்னர் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வருத்தம் அடைந்த சத்தியன் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகன் சந்துரு (வயது 23), இவரது நண்பர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தமன் (22). பட்டதாரி வாலிபர்களான அவர்கள் இருவரும் சென்னையில் நடைபெறும் ஒரு தேர்வுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். சந்துரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை சித்தேரிமேடு கிராமம் பகுதியில் வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சந்துரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சந்திரமூர்த்தி (வயது 24). பி.காம் பட்டதாரி. வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் வீட்டில் எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டிருந்ததால், அவரது தாய், ஏன் எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டிருக்கிறாய் என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சந்திரமூர்த்தி வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய், மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷா ஏஞ்சல் (வயது 30) , இவர் தனது கணவரை பிரிந்து தனது மகன் டென்னியுடன் (5) வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சிமெண்டு ஓடு போட்ட வீட்டில் உள் தாழ்பாள் போட்டபடி நிஷா ஏஞ்சல் தனது மகனுடன் இரும்பு கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டுக்குள் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்த பக்கத்து வீட்டில் இருந்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கட்டிலில் இருந்த மெத்தை எரிந்ததால் புகை மூட்டத்தில் மூச்சு திணறி நிஷா ஏஞ்சல் மற்றும் அவரது மகன் டென்னி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு மூச்சு திணறி இறந்து போன நிஷா ஏஞ்சல் மற்றும் அவரது மகன் டென்னி ஆகியோரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலே மின்கசிவு ஏற்பட்டு அதில் மூச்சுத்திணறி இருவரும் இறந்து போனார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அமுல் (வயது 35). புஞ்சையரசந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (35), இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மொபட் டில் சென்றனர். அமுல் மொபட்டை ஓட்டிச்சென்றார். புஞ்சையரசந்தாங்கல் அருகே இவர்கள் சென்றபோது முன்னால் சென்ற ஒரு லாரியில் இவர்களது மொபட் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அமுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜோதி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

காஞ்சிபுரம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
காஞ்சிபுரம்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கோவிந்த ரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் கார்த்திக் (வயது 20) இவரது நண்பர் திருப்பத்தூர் உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (20), இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பரான தமிழரசனை அழைத்து கொண்டு மோட்டார்சைக்கிளில் காஞ்சிபுரம் அருகே கூரம் கேட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெள்ளை கேட் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த தமிழரசன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் மாயமானார். ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட மாணவரை மீனவர்கள் படகு மூலம் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 13 பேர் ஒரு குழுவாக பொழுது போக்குவதற்காக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த இ.சி.ஆர். சாலையில் உள்ள புலிக்குகை கடற்கரைக்கு நேற்று சென்றனர். இதில் மாணவர்கள் அனைவரும் புலிக்குகைக்கு பின்புறம் உள்ள கடலில் சந்தோஷமாக குளித்தனர். இதில் சென்னை தனியார் கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கும், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் சந்தோஷ் (வயது 19) , மற்றொரு மாணவர் நவீன் (20) ஆகியோரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
அருகில் குளித்து கொண்டிருந்த சக மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய அவர்களை காப்பாற்ற கூச்சல் போடவே அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். நவீனை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
சந்தோஷ் ராட்சத அலையில் அலையில் சிக்கி மாயமானார். ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சந்தோஷை மீனவர்கள் படகு மூலம் தேடி வருகின்றனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் உடமைகளை சுமந்து செல்லும் டிராலிகள் பயன்படுத்த தொடரும் தடையால் பயணிகள் அவதியடைகின்றனர்.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் ஊரடங்கால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மாா்ச் 24-ந் தேதியில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து உள்நாட்டு விமான சேவைகள் கடந்த மே மாதம் 25-ந் தேதியில் இருந்து குறைந்த அளவில் கடும் கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கின.
அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமாா் 30-க்கும் குறைவான விமானங்களில் 3 ஆயிரம் பயணிகளே பயணித்தனா். உள்நாட்டு பயணிகள் பெரிய அளவில் உடமைகள் எடுத்து செல்லக்கூடாது. பயணிகளுக்கு உடமைகளை சுமந்து செல்லும் டிராலிகள் சேவைகள் கிடையாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
மத்திய-மாநில அரசுகள் கடந்த 1-ந் தேதியில் இருந்து ஊரடங்கில் தளா்வுகள் அறிவித்தன. இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளும், பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து உள்ளன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 126 விமானங்கள் இயக்கப்பட்டு சுமாா் 13 ஆயிரம் பயணிகள் பயணிக் கின்றனா். ஆனாலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டிராலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை எந்தவித தளா்வும் இல்லாமல் நீடிக்கிறது.
இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு பகுதிகளில் பயணிகள் டிராலிகள் இல்லாமல் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகின்றனா். டிராலி இல்லாததால் சிலா் விமானநிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனா். ஆனால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வழக்கம்போல் டிராலி சேவைகள் பயணிகளின் பயன்பாட்டில் உள்ளன.
இதுபற்றி சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரே டிராலியை பல பயணிகள் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை கூறியதால் உள்நாட்டு முனையத்தில் டிராலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.
ஆனால் பயணிகள் தரப்பில் கூறும்போது, விமான டிக்கெட் கட்டணத்தில் டிராலி பயன்பாட்டிற்கும் சோ்த்து தான் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிராலியை தர மறுப்பது விமான சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று தெரிவித்தனா்.

நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள முகவரிக்கு 2 பார்சல்கள் வந்தன.
அந்த பார்சலில் கொரோனா மருந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பார்சல்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த பார்சல்களில் இருந்த தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த 165 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பார்சல்களில் எழுதப்பட்டு இருந்த சென்னை மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெறவேண்டும் என காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம்:
மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும், விவசாயிகளின் நலன் காக்கும் வரை ஓய மாட்டோம், விவசாயிகளை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம், பாஜக அரசின் வேளாண் சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பது போன்ற முழக்கங்களை மு.க.ஸ்டாலின் எழுப்ப, அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய அரசு புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கி கொண்டு இருப்பதாகவும், விவசாயி என சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 3700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னை வடக்கில் நடந்த போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் நடைபெற்ற போராட்டத்தில் வைகோ, கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.

வேளாண் மசோதாவுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
காஞ்சிபுரம்:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காஞ்சிபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி கீழ்அம்பியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பச்சைத்துண்டு, பச்சை நிற மாஸ் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், முன்னதாக வயலில் இறங்கி அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து பேசினார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் வைகோ, ரவிபச்சமுத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.