என் மலர்
செய்திகள்

தற்கொலை
செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
காஞ்சிபுரம் அருகே செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சந்திரமூர்த்தி (வயது 24). பி.காம் பட்டதாரி. வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் வீட்டில் எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டிருந்ததால், அவரது தாய், ஏன் எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டிருக்கிறாய் என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சந்திரமூர்த்தி வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






