என் மலர்
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). இவர் நேற்று அதிகாலை உத்திரமேரூர் செல்வதாக கூறி விட்டு சென்றார். நேற்று காலை உத்திரமேரூர்-காஞ்சீபுரம் சாலையில் தட்டான்குளம் அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
இது குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
படப்பை அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வெங்காடு ஊராட்சியில் உள்ள மேட்டு கருணாகரசேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவருடைய மனைவி மோனிஷா (19) நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் வாந்தி எடுத்துள்ளார்.
என்ன என்று கணவர் கேட்டதற்கு வயிற்று வலியின் காரணமாக பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மோனிஷாவை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் மோனிஷாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைதானார். விசாரணையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தது தெரிந்தது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி ராஜா அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மேரிலதா (வயது 41). இவர், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அவர், தனது மகனுக்கு வேலையும், தனக்கு வங்கியில் கடன் வாங்கி தரவும் ஆன்லைனில் வந்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு வேலை தருவதாக கூறி என்னிடம் இருந்து சிறுக, சிறுக ரூ.24 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை. இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமலா ரத்தினம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பவம் தொடர்பாக கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (35) என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
சாப்ட்வேர் என்ஜினீயரான சந்தோஷ்குமார், கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் வீட்டில் இருந்தே பணி செய்து வருகிறார்.. அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி விட்டார். தனது சம்பள பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.
அதன்பிறகு சூதாட்டத்துக்கு பணம் அதிகம் தேவைப்பட்டதால் தனது செல்போன் நம்பரை ஆன்லைனில் பதிவு செய்து வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தார். அதை பார்த்து இவரிடம் மேரிலதா தொடர்பு கொண்டபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினார்.
அதன்பிறகு சந்தோஷ்குமார் இறந்துவிட்டதாகவும், தான் அவரது நண்பர் கார்த்திக் பேசுவதாகவும் கூறி மேரி லதாவிடம் மேலும் பணத்தை கறந்தார். அதன் பிறகு கார்த்திக் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், தான் வேலை மற்றும் லோன் வாங்கி தருவதாகவும் வேறொருவர் போல் பேசி மேரிலதாவிடம் மொத்தம் ரூ.24 லட்சம் வரை வாங்கினார்.
இவ்வாறு மோசடியில் வாங்கிய பணம் அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார். இதனால் பணத்தேவைக்காக வீடுகளுக்கு அதிகாலையில் பால் பாக்கெட் போடுவது, பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வந்தார். அதில் வந்த வருமானத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்தார்.
இதுவரை சுமார் ரூ.35 லட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் சந்தோஷ்குமார் இழந்து இருப்பதும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான சந்தோஷ் குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம்:
சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சி தலைவர்கள் தற்போதே தங்களின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதில் முக்கியமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் குலதெய்வ வழிபாடு செய்தபின்னர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில் ,
நான் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். நான் எம்எல்ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று தெரிவித்துள்ளார். முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின் ஏன் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று கேள்வி எழுப்பினார்.
இலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.
ஆலந்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்களான ஜெபர்சன், ஜோசப், அப்துல் கலாம், அசோக்குமார், முருகன், அந்தோணி உள்பட 29 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் உள்ளிட்ட 33 பேர் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், சூசை மைக்கேல், முனியசாமி உள்பட 7 மீனவர்களை கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி இலங்கை கடற்படையினர் பிடித்தனர்.
அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்களை மீட்டனர்.
அதைத்தொடர்ந்து, 1 மாதத்துக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்ட 40 மீனவர்கள் நேற்று சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை தமிழக மீனவளத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ஜூலியஸ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதிகளை அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர்.
அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் கான்ஸ்டன் நிருபர்களிடம் கூறும்போது,
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்களிடம் பிடிபட்ட சுமார் 250 படகுகளை மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தங்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விமானத்தில் 4 மாத குழந்தை இடைவிடாமல் அழுததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
டெல்லியை சோ்ந்த லட்சுமிதேவி (வயது 30) என்ற பெண் தனது கணவர் மற்றும் 4 மாத பெண் குழந்தையுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் டெல்லி செல்ல நேற்று சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தார்.
அப்போது லட்சுமிதேவியின் 4 மாத குழந்தை திடீரென இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி அவரிடம் விமான பணிப்பெண்கள் கூறினர். லட்சுமிதேவி எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து கைக்குழந்தையுடன் அந்த பெண் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விடுவதாக தெரிவித்தார். அதன்படி அந்த பெண் விமானத்தில் இருந்து குழந்தையுடன் இறங்கி விட்டார். அவரது கணவா் ராகுல் மட்டும் அதே விமானத்தில் டெல்லிக்கு சென்றார். இதே விமானத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றதும் குறிப்பிடத்தக்கது. 106 பயணிகளுடன் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.15 மணிக்கு இந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அந்த பெண், கைக்குழந்தையுடன் விமான நிலையத்தின் உள்பகுதியில் தங்க வைக்கப்பட்டார். சென்னையில் இருந்து டெல்லி சென்ற மற்றொரு விமானத்தில் கைக்குழந்தையுடன் அந்த பெண் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டார்.

பல்லாவரம் அருகே ‘வாட்ஸ்-அப்’பில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்:
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருநீர்மலை சாலையில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது 29). இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையில் சரியான வேலை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவித்த அருண்குமார், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்தி தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி (வயது32). சமையல்காரராகவும், நிலத்தரகராகவும் வேலை செய்து வந்தார்.
கடந்த 11-ந்தேதி இரவு இவரை சில நபர்கள் கத்தியால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 12-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.
விசாரணையில், காஞ்சீபுரம் ஆலடி தோப்பு தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் அம்சா (40). இவரது 2-வது கணவர் பெருமாள். இவர் அம்சாவை பிரிந்து சென்றதால் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அம்சாவுக்கும் லிங்கமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
அம்சாவின் முதலாவது மகள் ஐஸ்வர்யம் (21) , திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்த ஹரிஹரன் என்கிற ஹரிஸ் 19 என்பவரை காதலித்து வந்தார்..
ஹரிகரனை சந்தேகத்தின் பேரில் மாகரல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு பிடித்து விசாரணை செய்தார்.
விசாரணையில் லிங்கமூர்த்தி அடிக்கடி அம்சா வீட்டுக்கு வருவது ஹரிஹரனுக்கு பிடிக்கவில்லை என்பதும் அதனால் 2 முறை கைகலப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.
அம்சா வீட்டுக்கு ஹரிஹரன் வரக்கூடாது என்று லிங்கமூர்த்தி மது குடித்துவிட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அம்சா, அவரது மகள் ஐஸ்வர்யம் ஆகியோர் ஹரிஹரனுகக்கு தகவல் தெரிவித்தனர். ஹரிகரன் தனது நண்பரான குருவிமலை கிராமத்தை சேர்ந்த நேதாஜி (20) என்பவருடன் சேர்ந்து லிங்க மூர்த்தியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், நேதாஜி, அம்சா அவரது மகள் ஐஸ்வர்யம் ஆகியோரை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் குடியாத்தம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உத்திரமேரூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூரை அடுத்த மானாமதி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 34). இவர் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் திரைப்படம் பார்க்க சென்றதாக தெரிகிறது.
அவரது மனைவி ரேவதி பக்கத்து தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார்.
நேற்று முன்தினம் 1½ மணி அளவில் சிவபிரகாசம் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 6 பவுன் நகையும் ரூ.60 ஆயிரமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை ஏதாவது கிடைக்குமா என்று சோதனை செய்து பார்த்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கொள்ளையர்கள் வந்து போனது தெரிகிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

படப்பை அருகே குடும்ப தகராறில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அரங்கலட்சுமி (வயது 48). இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 29). இவருக்கு 5 வயதில் பாலமுருகன் என்ற மகன் உள்ளான். தாயாருடன் வசித்து வந்த பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்ததில் குடும்பத்தகராறு காரணமாக பிரியதர்ஷினியும் அவரது கணவர் மணிகண்டனும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதும் அதன் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
பிரியதர்ஷினியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாஜிநகர், அய்யங்கார் தெருவை சேர்ந்தவர் சாமி பகவதி. இவரது மனைவி நதியா (34). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.
நதியா நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. வயிற்று வலி அதிகமானதால் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம், 18 செல்போன்கள், 8 மதுபான பாட்டில்கள், சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 18 செல்போன்கள், 8 மதுபான பாட்டில்கள், சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சையத் இப்ராகீம் கனி (வயது 27) , சாகுல் அமீது (36) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் விலை உயர்ந்த சிகரெட்டுகள், செல்போன்கள், மதுபான பாட்டில்கள் இருந்தன. பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடமும் இருந்து ரூ.72 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 18 செல்போன்கள், 8 மதுபான பாட்டில்கள், சிகரெட்டுகள் ஆகியவறையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.