என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் அருகே உடற்கல்வி ஆசிரியர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் பரிதாபாக உயிரிழந்தார்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்து உயிரிழந்தார்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் கவுதமன்(வயது45). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் அந்தியூர் வந்தார். பிறகு அங்கிருந்து மலைப்பகுதியில் உள்ள தாமரைகரைக்கு சென்றார். அங்கு தோட்டத்து நிலத்தை பார்வையிட சென்றார்.

    தாமரைகரையில் இடங்களை பார்வையிட்டு மீண்டும் மோட்டார்சைக்கிளில் மலைப்பாதையில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே அந்தியூரில் இருந்து மலையின் மேலே ஏறிய ஒரு லாரி மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் மோட்டார்சைக்கிளிலிருந்து கவுதமன் தூக்கி வீசப்பட்டார். படுகாயத்துடன் துடித்து கொண்டிருந்த அவரது பின்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் ஆம்புலன்சு வந்து அவரை ஏற்றி கொண்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கவுதமன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.

    விபத்தில் பலியான கவுதமனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். * * * விபத்தில் பலியான உடற்கல்வி ஆசிரியர் கவுதமன்.
    ஈரோட்டில் இன்று அதிகாலை மளிகை கடையில் புகுந்து கத்தி முனையில் பெண்ணை வெளியே இழுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு முத்தாம்பாளையம் ஹவுசிங் யூனிட்-1 பகுதி நல்லியம்பாளையம் ரோட்டில் மளிகை கடை வைத்திருப்பவர் ஜெயக்குமார். இவரது மனைவி கீதா (வயது 40).

    இவர்களது வீடு கடையின் பின்புறம் உள்ளது. இன்று அதிகாலை ஜெயக்குமார் கடைக்கு சரக்குகளை வாங்க மார்க்கெட்டுக்கு சென்று விட்டார். இதனால் அதிகாலை 5 மணி அளவில் அவரது மனைவி கடையை திறக்க சென்றார்.

    கடையை திறந்து பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கிய 2 பேரும் மளிகை கடையில் பொருட்களை வாங்குவது போல் வந்தனர். அப்போது திடீரென 2 பேரும் கடைக்குள் புகுந்தனர். ஒருவன் கீதாவின் கழுத்தை பிடித்தான். இன்னொருவன் கத்தியை காட்டி மிரட்டி ‘‘கழுத்தில் உள்ள நகையை கழட்டி கொடு. இல்லை என்றால் குத்தி விடுவேன்’’ என்று மிரட்டினான்.

    ஆனால் கீதா நகையை கழற்ற விடாமல் இறுக பிடித்து கொண்டார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை தர...தரவென வெளியே இழுத்து வந்தனர். அந்த சமயத்தில் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாகி விட்டது. கீதா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    கொள்ளையர்களிடம் கடைசி வரை போராடியும் கீதாவால் நகையை காப்பாற்ற முடியவில்லை. நகையை இறுக்கி பிடித்து போராடிய அவரை கொள்ளையர்கள் இழுத்து வந்ததால் அவரது கையிலும், கழுத்திலும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    ஈரோட்டில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அந்த பகுதி மக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த துணிகர சம்பவம் குறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். #Tamilnews

    ஈரோட்டில் அடுத்தடுத்த 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு போனது.
    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் பெருந்துறை ரோட்டில் அடுத்தடுத்து 2 ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் அவர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடைகளை திறந்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது கடைகளின் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பணம் வைத்த மேஜையை திறந்து பார்த்தனர். அப்போது 2 கடைகளிலும் ரூ.3 ஆயிரமும், ஒரு கணினியும் திருட்டு போனது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜவுளிக்கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணத்தையும், கணினியையும் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழையபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் பணம், கணினி திருட்டு போனது. அங்கும் மேற்கூரையை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தார்கள். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், நேற்று நடந்த திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சீட்டு பணத் தகராறில் ஆசிரியரை காரில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பாப்பாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). விவசாய ஆசிரியராக பணி புரிந்தவர். இவரது மனைவி பெயர் சுமதி (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    பழனிசாமி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி இவருக்கும், சிலருக்கும் பணத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை ஈரோட்டை சேர்ந்த கார் டிரைவர் சிலம்பரசன், மேலும் 2 பேர் காரில் வந்தனர். சிலம்பரசனின் மாமியார் பெயர் கிருஷ்ணகுமாரி.

    கிருஷ்ணகுமாரிக்கும், ஆசிரியர் பழனிசாமிக்கும் இடையே சீட்டு போட்டதில் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை உள்ளது. இதையொட்டி பழனிசாமி வீட்டுக்கு வந்த சிலம்பரசனும் அவருடன் வந்தவர்களும் பழனிசாமியிடம் 90 ஆயிரம் பணத்தை எப்போது கொடுப்பாய்...? கேட்டு தகராறு செய்த அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    பிறகு அவரை வலுகட்டாயமாக கடத்தினர். இதை தடுத்த அவரது மனைவி சுமதியை தள்ளி விட்டு விட்டு பழனிசாமியை காரில் தூக்கிபோட்டு கடத்தி சென்று விட்டனர்.

    தனது கண் எதிரேயே கணவர் கடத்தப்பட்டதை கண்டு திடுக்கிட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பழனிசாமியை காரில் கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். 

    தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள அக்கரை கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). விவசாயி. இவர் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டார். காரை பாலசுப்பிரமணியத்தின் மாமனார் நல்லசாமி ஓட்டினார்.

    காரின் பின்பகுதியில் பாலசுப்பிரமணியத்துடன் அவரது மனைவி தெய்வ மணி (45) இருந்தார். முன் சீட்டில் பாலசுப்பிரமணியத்தின் மகன் அஸ்வின் பாரதி (19) இருந்தார்.

    இவர்கள் சென்ற கார் இன்று காலை கோபி-குன்னத்தூர் ரோட்டில் அருகே உள்ள கெட்டிச்செவியூர் அருகே சென்று கொண்டிருந்தது.

    திடீரென கார் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த பாலசுப்பிரமணியன், தெய்வமணி, நல்லசாமி, அஸ்வின் பாரதி ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.

    பால சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரும், மற்றவர்களும் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அருகே மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் மனைவி புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, நசியனூர் அருகே உள்ள செம்மாம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது54). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் செல்வி(51).

    இவர்களுக்கு விஜயா என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி கணவரும், மனைவியும் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பிறகு மனைவியிடம் ‘நீ வீட்டுக்கு போ.நான் எனது அம்மா வீட்டுக்கு போய் வருகிறேன்’ என்று கூறி விட்டு ஆறுமுகம் போனார்.

    அன்று சைக்கிளில் போனவர்தான் இன்று வரை வரவில்லை. அவர் எங்கு சென்றார்?. என்ன ஆனார்?. இப்போது எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை.

    கடந்த 11 ஆண்டுகளாக மாயமான கணவரை பல இடங்களில் தேடி..தேடி பிறகு அப்படியே மறந்து விட்டார் செல்வி.

    இந்த நிலையில் திடீரென கணவர் நினைப்பு வந்த மனைவி செல்வி. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசில் “என் கணவரை காணவில்லை. கண்டுபிடித்து கொடுங்க” என்று கூறினார்.

    போலீசாரும் புகார் எழுதி கொடுங்கம்மா... தேடுகிறோம்...என்று கூறினர்.

    அதன்படி செல்வி எழுதி கொண்டு வந்த புகார் மனுவை போலீசாரிடம் கொடுக்க அதை படித்த போலீசாருக்கு தூக்கு வாரி போட்டது. 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து கொடுங்கள்...என்று மனுவில் எழுதி இருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.

    என்னம்மா உன் கணவர் காணாமல் போய் 11 ஆண்டுக்கு பிறகு இப்போது வந்து புகார் கொடுக்கிறியே..இது நாள் வரை ஏன் புகார் கொடுக்க வரவில்லை? என கேட்டனர்.

    அதற்கு செல்வி“ நான் உலக நடப்பு தெரியாதவள். வெளி உலகம் பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது. யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். காணாமல் போன என் கணவர் வருவார்...வருவார்..என இத்தனை வரு‌ஷமா காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. எனக்கு சிலர் போலீசில் போய் புகார் கொடு என்று கூறினார்கள். அதனால் தான் இப்போது வந்து புகார் கொடுக்கிறேன் என கணவரை கண்டுபிடித்து தாருங்கள்” என்று கூறினார்.

    புகாரை பெற்ற போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். #tamilnews
    ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடங்கள், என்ஜின் டிரைவர்களின் கட்டுப்பாட்டு அலுவலகம், ரெயில்வே தண்டவாளங்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மேலாளர் பார்வையிட்டு, ரெயில்வே ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நான் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளராக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு ரெயில் நிலையத்திற்கு முதல் முறையாக வந்து ஆய்வு செய்தேன். இங்கு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு லிப்ட் அடுத்த மாதம் ஜூலை 15-ந் தேதிக்குள் திறக்கப்படும். மற்றொரு லிப்ட் 3 மாதங்களில் அமைக்கப்படும். நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும்.

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகளில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அடுத்த மாதத்திற்குள் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகள் இருக்காது. பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஒருசில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும்.

    ஈரோடு-திருச்சி மார்க்கத்தில் மின்சார என்ஜின்கள் இயக்குவதற்காக மின்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதியில் இருந்து 7 ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலமாக இயக்கப்பட உள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகள் உள்ளன. அனைத்து ரெயில்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை நிற்கின்றன. இதனால் நடைமேடைகளில் ஒரு ரெயில் நின்றிருக்கும்போது, மற்றொரு ரெயில் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நடைமேடைகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை தற்போது இல்லை.

    ரெயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான இடங்களில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்கிற ஆணை இன்னும் வரவில்லை. இதற்கான ஆணை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
    சத்தியமங்கலத்தில் அதிவிரைவுப்படை போலீஸ்காரர் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அலுவலகத்தில் போலீஸ்காரராக பணி புரிந்தவர் கோபி (வயது 38). இவரது சொந்த ஊர் விருத்தாசலம்.

    மனைவி பெயர் பாரதி. இவர்களுக்கு சாதிஷா (8) என்ற ஒரு மகள் உள்ளார். சிறப்பு அதிரடிப்படை அலுவலக வளாகத்தில் குடியிருப்பு பகுதி உள்ளது.

    இங்கு போலீஸ்காரர் கோபி மட்டும் வசித்து வந்தார். மனைவியும், மகளும் விருத்தாசலத்தில் வசிக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் கோபி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபியின் தற்கொலை குறித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சத்தியமங்கலத்துக்கு விரைந்து வந்தனர்.

    குடும்ப தகராறு காரணமாக கோபி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நான் எனது பேரனை பார்க்க வந்துள்ளதால் இப்போதைக்கு பேட்டி வேண்டாம் என்று எஸ்.வி. சேகர் பேட்டி அளிக்க மறுப்பு தெரிவித்தார்.
    கோபி:

    நடிகர் எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்தை பகிர்ந்திருந்தார்.

    இதையொட்டி எஸ்.வி. சேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யாமல் போலீசார் இழுத்தடித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. கடந்த 20-ந்தேதி எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

    இந்த நிலையில் எஸ்.வி. சேகரின் மருமகளுக்கு மகன் பிறந்துள்ளான். பேரனை பார்ப்பதற்காக எஸ்.வி.சேகர் நேற்று இரவு கோபி சென்றார்.

    சம்பந்தி வீட்டுக்கு சென்ற எஸ்.வி.சேகர் பேரனை பார்த்து கொஞ்சினார். அங்குள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். நேற்று பிரதோஷம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு சாமிதரிசனம் செய்தார்.

    சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த எஸ்.வி.சேகரிடம் நிருபர்கள் பேட்டிக்கு சென்றனர்.

    அப்போது எஸ்.வி.சேகர், என்மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. நான் எனது பேரனை பார்க்க வந்தேன். இப்போதைக்கு பேட்டி வேண்டாம் என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்று விட்டார்.

    அ.தி.மு.க.கட்சி துரோகிகள் கையில் உள்ளதாகவும் இன்னும் இரண்டு மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK
    ஈரோடு:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் நடந்த இணைப்பு விழாவில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    இன்று நடைபெறும் கூட்டத்திற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி தான் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

    நான் ஈரோட்டுக்கு வரும் முன் ஈரோட்டை சேர்ந்த ஒரு போலீஸ் உயர் அதிகாரி என்னிடம் வந்து நீங்கள் சிறிது நேரம் கழித்து ஈரோடுசெல்லுங்கள் என்றார். அதற்கு நான் ஏன் சிறது நேரம் கழித்து செல்ல வேண்டும் என்றேன். அதற்கு அந்த போலீஸ் அதிகாரி முதல்வர் சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார். எனவே நீங்கள் தாமதமாக செல்ல வேண்டும் என்றார்.

    அதை மீறி நாங்கள் வந்த போது எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் தங்கள் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். யார் இவ்வாறு செய்வார்கள்?. ரவுடிகள் தான் ரோட்டில் செல்லும் வாகனங்களை தடுப்பார்கள். காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இந்த ஆட்சி இன்னும் இரண்டு மாதத்தில் கவிழ்ந்து விடும். அனைவரும் வீட்டுக்கு போய் விடுவார்கள்.

    ஆர்.கே.நகரில் எனக்காக பிரச்சாரம் செய்தவர் இந்த எடப்பாடி பழனிசாமி. அவர் என்னை பார்த்து கேட்கிறார். யார் இந்த தினகரன்? என்று.

    2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு அளிக்க வந்த போது என் வீட்டில் இருந்தவர் தான் இந்த எடப்பாடி. என்னை கட்சியில் உறுப்பினர் இல்லை என்கிறார். அப்படி என்றால். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்காக ஏன் பிரச்சாரம் செய்தார்?.

    ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வீட்டிற்கு ரூ.6ஆயிரம் வீதம் ரூ.150 கோடி வரை பணம் கொடுத்தனர். 32 அமைச்சர்களும் தெரு தெருவாக சுற்றினார்கள். ஆளும் கட்சி என்ற அதிகாரமும் அவர்களிடம் இருந்தது. ஆனால் நான் தான் வெற்றி பெற்றேன்.

    அதில் எனக்கு வருத்தம் என்ன வென்றால். நானே இரட்டைஇலை சின்னத்தை தோற்கடித்து விட்டேனே என்று தான். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. தற்போது அ.தி.மு.க.கட்சி துரோகிகள் கையில் உள்ளது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக வந்தாலும், வராவிட்டாலும் இந்த ஆட்சி கவிழ்வது உறுதி. எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை என்றால். 18 பேரும் மீண்டும் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அப்போது இந்த ஆட்சி கவிழ்வது உறுதி. இதை காவல்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தினகரன் பேசினார். #TTVDinakaran #AMMK
    காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
    ஈரோடு:

    ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

    ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் சூளுரைத்தவர் நமது இதய தெய்வம் ஜெயலலிதா. எனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்களை ஏமாற்ற தி.மு.க. செய்யும் நாடகம் பொதுமக்களிடம் எடுபடாது.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவரது வழியில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வெற்றி பெற்றுள்ளார்.



    தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தரும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். இந்த கோட்டையை எவராலும் கிட்ட நெருங்க முடியாது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
    ரஜினியும்- கமலஹாசனும் மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியல்கட்சி தொடங்கி இருக்கிறார்கள் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். #rajinikanth #kamal #actressnamitha

    ஈரோடு:

    தமிழ் பட உலகில் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை நமீதா. தற்போது இவர் படங்களில் நடிக்கா விட்டாலும் தனது கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்த நிலையில் ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் நடிகை நமீதா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இப்பவும் தமிழக ரசிகர்கள் மத்தியில் எனக்கு என்று ஒருவரவேற்பு உள்ளது. தமிழக ரசிகர்கள் என்னை மறக்க மாட்டார்கள். நானும் மறக்க மாட்டேன்.

    அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க...அதுபற்றி சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அரசியல் சூழ்நிலை இப்போது தமிழகத்தில் சரியில்லை என்றுதான் நான் கருதுகிறேன்.


    அதே சமயம் ரஜினியும்- கமலஹாசனும் மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியல்கட்சி தொடங்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக அவங்க 2 பேரும் நல்லதை செய்வாங்க... நான் நம்புகிறேன்.

    தமிழ்பட உலகில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். இப்போதைக்கு வேறுமொழிபடங்களில் நடிக்கவில்லை.

    இவ்வாறு நடிகை நமீதா கூறினார். #rajinikanth #kamal #actressnamitha

    ×