search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SVe Shekar"

    நான் எனது பேரனை பார்க்க வந்துள்ளதால் இப்போதைக்கு பேட்டி வேண்டாம் என்று எஸ்.வி. சேகர் பேட்டி அளிக்க மறுப்பு தெரிவித்தார்.
    கோபி:

    நடிகர் எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்தை பகிர்ந்திருந்தார்.

    இதையொட்டி எஸ்.வி. சேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யாமல் போலீசார் இழுத்தடித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. கடந்த 20-ந்தேதி எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

    இந்த நிலையில் எஸ்.வி. சேகரின் மருமகளுக்கு மகன் பிறந்துள்ளான். பேரனை பார்ப்பதற்காக எஸ்.வி.சேகர் நேற்று இரவு கோபி சென்றார்.

    சம்பந்தி வீட்டுக்கு சென்ற எஸ்.வி.சேகர் பேரனை பார்த்து கொஞ்சினார். அங்குள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். நேற்று பிரதோஷம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு சாமிதரிசனம் செய்தார்.

    சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த எஸ்.வி.சேகரிடம் நிருபர்கள் பேட்டிக்கு சென்றனர்.

    அப்போது எஸ்.வி.சேகர், என்மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. நான் எனது பேரனை பார்க்க வந்தேன். இப்போதைக்கு பேட்டி வேண்டாம் என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்று விட்டார்.

    பெண்கள் குறித்து இழிவாக பேசிய எஸ்.வி. சேகரை கைது செய்யாதது குறித்து காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும் என்று நிருபர்கள் பேட்டியின் போது தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரி இன்று மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

    காவிரி வெற்றி விழா மற்றும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த விளக்க கூட்டங்கள் பாரதிய ஜனதா சார்பில் நடத்தப்படுகிறது. இன்று பொள்ளாச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.

    இது போல் 40 தொகுதிகளிலும் நடத்த உள்ளோம். கருணாநிதி பிறந்த நாளை காவிரி வெற்றி விழாவாக கொண்டாடுவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கும் கருத்து தவறானது.

    அவர்கள் ஆட்சி காலத்தில் செய்ய தவறியதால் அப்பட்டமாக கிடைத்த தோல்வி இன்று மத்திய அரசால் வெற்றியாக மாறி உள்ளது.

    காவிரி பிரச்சினையில் குமாரசாமி கருத்தை ஏற்று கொள்ள முடியாது. முன்பு எதற்கெடுத்தாலும் காவிரி பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குமாரசாமி கருத்துக்கு ஏன் பதில் சொல்லவில்லை.

    தமிழகத்தில் எதிர் கட்சிகளின் எண்ணம் பாரதிய ஜனதா, மோடியை எதிர்க்க வேண்டும் என்பதே ஆகும். சுயநலம் என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

    கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி பொறுப்பேற்க மக்கள் விரும்பவில்லை. அதனால் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நாங்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்தோம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசுக்கு தோல்வி என்று கூற முடியாது. இதனை ஜி.எஸ்.டி.வரிக்குள் கொண்டு மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு 30 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வரி விதிக்கிறது. இதற்கான வரியை குறைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். இதற்காக நான் கடிதம் எழுதி உள்ளேன்.

    எஸ்.வி. சேகர் பிரச்சினையை பொறுத்த வரை அவரை கைது செய்யாதது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். பெண்களை யார் இழிவாக பேசினாலும் அவர்களை காப்பாற்ற பாரதிய ஜனதா முயற்சி செய்யாது. எஸ்.வி. சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கட்சி ரீதியாக மேல் நடவடிக்கை குறித்து வழிமுறைகள் உள்ளது. அதனை எடுத்து வருகிறது.

    நிபா வைரஸ் பரவி வருகிறது. எப்படி காய்ச்சல் வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக, கேரள, மத்திய சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெண் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #SVeShekher #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் கவர்னருக்கு எதிரான கருத்தை அந்த பெண் நிருபர் வெளியிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி.சேகர்பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்தும் வகையில் டுவிட்டரில் கடும் விமர்சனத்தை பதிவு செய்தார்.

    இதுதொடர்பாக கடும் கண்டனம் எழுந்தது. எஸ்.வி. சேகர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் முயற்சி எடுத்த நிலையில் அவர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டை நாடினார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுபற்றி மதுரையில் வந்திருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


    எஸ்.வி.சேகர் சமூக வலைதளங்களில் தவறான கருத்தை தெரிவித்து விட்டு அதை நான் எழுதவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம்.

    சமூக வலைதளத்தில் ஒருமுறை தப்பான கருத்தை கூறினாலும், அது பரவிக் கொண்டே தான் இருக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது.

    எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ஒரு தரப்பையோ, ஒரு சமூகத்தையோ அவமரியாதையாக பேசக்கூடாது.

    கர்நாடகாவில் பா. ஜனதா பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த தில்லுமுல்லு காரணமாக ராஜராஜேஸ்வரி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மக்களுக்கு பயன் தருபவை. மக்கள் விரும்பாவிட்டால் அந்த திட்டங்கள் நிறுத்தப்படும். கெய்ல் திட்டத்தில் 91 சதவீத வேலை முடிந்துள்ளது. 9 சதவீத வேலை மட்டுமே பாக்கி உள்ளது. இதனை உயர் நீதிமன்றம் நடைமுறைப்படுத்த கூறியும் மக்கள் எதிர்ப்பதால் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SVeShekher #TamilisaiSoundararajan #BJP
    ×