என் மலர்
ஈரோடு
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பணியை தொடங்கும் முன்பு வெப்பமானி கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் தூய்மை பணியாளர்கள் 74 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 12 பேருக்கும், அலுவலகத்துக்கு வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி கட்ட வந்த பொதுமக்கள் 5 பேருக்கும் வெப்பமானி கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து, உடனடியாக மருத்துவ நடவடிக்கை எடுக்கும் வகையில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்துக்கு 35 வெப்பமானி கருவிகள் வந்துள்ளன. இனிமேல் பேரூராட்சி அலுவலகத்துக்கு வரும் அனைவரும், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பவானி போலீஸ் நிலையத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். அவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 24). லேத் பட்டறை தொழிலாளி. திப்பிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். அவருடைய மகள் பிரியதர்ஷினி (19). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஸ்ரீதரும், பிரியதர்ஷினியும் ஒரே பஸ்சில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். திடீரென 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை மாற்றி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே பிரியதர்ஷினியின் தந்தை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ‘வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகளை காணவில்லை’ என்று புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீதரும், பிரியதர்ஷினியும் பாதுகாப்பு கேட்டு நேற்று பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி 2 பேரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் அவரது காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்ரீதரின் பெற்றோர் மட்டும் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாளவாடி அருகே 6 மாதமாக கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது தாளவாடி வனச்சரகம். இங்கு ஏராளமான மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பீம்ராஜ்நகர் பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டது.
அதன்பின்னர் அங்கிருந்து தொட்டகாஜனூர், சூசைபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு கட்டப்பட்டிருக்கும் 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும் கடித்து குதறி கொன்று வந்தது. காவலுக்காக விடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட நாய்களையும் வேட்டையாடியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள், கிராமமக்கள் பீதியடைந்தனர். இதைத்தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று வனத்துறையினர் சிறுத்தை நடமாடி வந்த பல்வேறு தோட்டங்களிலும், கல்குவாரியிலும் கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. அவ்வப்போது தோட்டங்களில் புகுந்து தனது வேட்டையை சிறுத்தை தொடர்ந்து வந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் சிறுத்தையை பிடிக்க வேறு ஒரு தோட்டத்தில் கூண்டு வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டகாஜனூரில் உள்ள ரங்கசாமி என்பவரது தோட்டத்தின் அருகே கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு பகுதியில் ஆடு, நாய் ஆகியவற்றை கட்டி வைத்து சிறுத்தை சிக்குகிறதா? என தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வனத்துறையினர் தொட்டகாஜனூர் சென்று, கூண்டை பார்த்தனர். அப்போது கூண்டில் சிறுத்தை சிக்கியிருந்தது தெரியவந்தது. அப்போது அது உறுமியபடி காணப்பட்டது.
பிடிபட்டது சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தை என்று கால்நடை டாக்டர் அசோகன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கூண்டோடு அந்த சிறுத்தையை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் அங்கிருந்து கேர்மாளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று சிறுத்தையை கூண்டில் இருந்து விடுவித்தார்கள். கூண்டின் கதவுகள் திறக்கப்பட்டதும் சிறுத்தை வெளியே பாய்ந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.
கடந்த 6 மாதமாக அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் கிராமமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தார்கள்.

பவானியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி கருப்பணன் ஆய்வு செய்தார்.
பவானி:
பவானி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இதுவரை 10 பேர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
பவானி மேற்கு தெரு, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சங்கமம் தெரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியுடன் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அரசு அதிகாரிகளிடமும், சுகாதாரப் பணியாளர்களிடமும் காலை, மாலை இருவேளை மருந்து தெளிக்கவும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு குடும்பத்தினரும் கபசுர குடிநீர் குடிக்கவும் அறிவுறுத்தினார்.
அப்போது ஜம்பை வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் மகேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், பவானி ஒன்றியக் குழு தலைவர் பூங்கோதை வரதராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி மன்ற செயலாளர் சண்முகம் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தது.
ஈரோடு:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தது. கொடுமுடி வட்டாரம் ஒத்தக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். கொடுமுடி வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான ஆர்.எம்.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.பி.பாலசுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை கண்டித்தும், உடனடியாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் வேம்பரசன், மாவட்ட செயலாளர்கள் கோபால், பிரபு, கொடுமுடி பேரூராட்சி தலைவர் பாபு, சென்னசமுத்திரம் பேரூராட்சி பெரியசாமி, இச்சிபாளையம் ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம், ரங்கசாமி, கந்தசாமி, சின்னச்சாமி, வெங்கம்பூர் துரை, கொடுமுடி அப்பாஸ், தாமரைபாளையம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை 1 முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியில் ஆகாயத்தாமரையால் அணைக்கட்டு மறைந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே சூரம்பட்டி வலசு பகுதியில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் வெட்டப்பட்டு உள்ளது. இந்த வாய்க்காலின் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. பின்னர் ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்த வாய்க்கால் பாசனம் தடை பெற்றது.
இதனால் வாய்க்கால் இருந்ததே மறைக்கப்பட்டது. எனவே சில ஆண்டுகளுக்கு முன்புவரை சாக்கடை சேரும் அணைக்கட்டாக இருந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகத்துடன் ஒளிரும் ஈரோடு, ஈரோடை அமைப்புகள் மற்றும் விவசாயிகள் இணைந்து சூரம்பட்டி அணைக்கட்டினை தூர்வாரும் பணியினை செய்தனர்.
அதுமட்டுமின்றி நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பாசன வாய்க்கால் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியும் தொடங்கியது. இதற்காக அணைக்கட்டின் உயரம் சில அடிகள் உயர்த்தப்பட்டன.
வாய்க்காலில் தண்ணீர் பாசனம் தொடங்கியதால், ஈரோட்டில் சாஸ்திரி நகர், நாடார் மேடு உள்பட வாய்க்கால் பாயும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரத்தொடங்கியது. ஆனால், இந்த அணைக்கட்டுக்கு தீராத சாபமாக இருப்பது ஆகாயத்தாமரை என்கிற பாசி. இந்த பாசியை அழிக்க ஈரோடு மாநகராட்சி முதல் தனியார் அமைப்புகள் வரை பலமுறை முயற்சிகள் செய்தும் வெற்றி பெற முடியவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘நீர் நிலைகளில் ஆகாயத்தாமரை வளர்கிறது என்றால் அந்த தண்ணீர் மாசு அடைந்து இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். நல்ல நீரில் மாசு கலக்க தொடங்கி விட்டால் அதை வெளிப்படுத்தும் விதமாக இயற்கையின் அறிகுறிதான் ஆகாயத்தாமரை.
எனவே அணைக்கட்டு பகுதியில் ஆகாயத்தாமரை தடை செய்ய முடியாத அளவு வளர்கிறது என்றால் அதில் மாசு கலந்த தண்ணீர் வந்து சேர்கிறது என்பது உறுதி. எனவே அணைக்கட்டுக்கு சாக்கடை, கழிவுகள் வந்து கலப்பதை முதலில் தடுக்க வேண்டும். அதன் பிறகே ஆகாயத்தாமரை வளர்வதை தடுக்க முடியும் என்றார்.
தற்போது அணைக்கட்டில் ஆகாயத்தாமரை வளர்ந்து தண்ணீர் பெருகிக்கிடப்பதே தெரியாமல் பெரிய புல்வெளி போன்று காட்சி அளிக்கிறது.

பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விவசாய, பெருமக்கள் நீரை சிக்கமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே இல்லை என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மருத்துவம், உள்ளாட்சி, காவல் என்று துறைகளை ஒருங்கிணைந்து சிறந்த முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு மற்றும் ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமே தமிழகத்தில் இல்லை என உறுதியாக தெரிவிக்கிறேன். அந்த தொழிலுக்கு பதிலாக மாற்று தொழிலை செய்து கொள்ளுமாறு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உதவிகள் செய்யப்பட்டன.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் பகுதியில், நாமக்கல் மாவட்டம் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறலாம்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் வேலைநாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ( www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த இணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறலாம். மேலும் தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அந்த பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்யலாம். இந்த சேவை, கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கு மாற்றாக, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி வேலைநாடும் இளைஞர்கள், இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலை அளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான சேவை உருவாக்கி தரப்பட்டு உள்ளது. எனவே இந்த சேவையை வேலைநாடுநர்களும், வேலை அளிப்போர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

காவல் பணியில் இருந்தவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம், ஈரோடு கலெக்டர் அலுவலகமாக விளங்கும் தீரன் சின்னமலை மாளிகையில் 4-வது மாடியில் இயங்கி வந்தது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 35 வயதான ஆண் ஒருவர் காவலர் பணியில் உள்ளார். இவர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில், அவருக்கு கடந்த 23-ந்தேதி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே 24-ந்தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திலேயே பணியில் இருந்தார். காய்ச்சல் இருந்ததால், 25-ந்தேதி முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு எந்த பணியிலும் ஈடுபடவில்லை. நேற்று முன்தினம், அவருக்கான கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.
அவர் பணியில் இருந்த தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் பூட்டப்பட்டது. அதுமட்டுமின்றி ஈரோடு கலெக்டர் அலுவலக 4-வது மாடியில் உள்ள மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் பூட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை ஒட்டி இருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகமும் மூடப்பட்டது.
நேற்று முன்தினம், காவலர் பணியில் இருந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்பட அங்கு பணியில் உள்ள 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்து உள்ளது.