search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைக்கட்டு"

    • குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று நடந்தது
    • தத்ரூப காட்சிகளை பார்த்து பொதுமக்கள் வியப்பு

    நாகர்கோவில்:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை யத்தின் வழிகாட்டு தலின்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலம் முழுவதும் வெள்ளப் பாதிப்பில் இருந்து தப்புவது குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் வெள்ள மீட்பு மாதிரி ஒத்திகை நடந்தது. குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அகஸ்தீஸ்வரம் தாலுகா விற்குட்பட்ட சுசீந்திரம் பழையாறு சோழன்திட்டை அணையில் வெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டார். இதில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக்குழு கமாண்டர் பிரவின் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தாசில்தார் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளத்தில் சிக்கிய வர்களை படகில் சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து தத்ரூப காட்சிகள் இடம் பெற்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டு வந்து தயார் நிலையில் இருக்கும் ஆம்பு லன்ஸ் மூலமாக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைப்பது போன்ற காட்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் குறித்தும் தத்ரூபமாக நடத்தி காட்டப்பட்டது. இதை பார்த்து பொதுமக்கள் சிலர் உண்மையிலேயே வெள்ளத்தில் சிக்கிய அவர் களை அதிகாரிகள் இவ்வளவு வேகமாக மீட்கிறார்களே என்று ஆச்சரியத்துடன் பார்வை யிட்டனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சி யில் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, போலீ சார், மருத்து வத்துறை, சுகாதா ரத்துறை உட்பட அனைத்து துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர்.

    தோவாளை தாலுகா விற்குட்பட்ட திருப்பதிசாரம் தெப்பக்குளத்திலும் ஒத்திகை நிகழ்ச்சியானது நடந்தது. கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட இரணியல் வள்ளியாற்று பாலம் பகுதியில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை சப்-கலெக்டர் அலர் மேல்மங்கை பார்வையிட்டார். குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், முஞ்சிறை, பள்ளிக்கல் பகுதிகளிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடத் தப்பட்டது.

    பள்ளிக்கல் பகுதியில் ஏற்கனவே பெய்த மழை நேரத்தின் போது மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட் டது. எனவே அந்த பகுதி யில் வெள்ள பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களை மீட்பது எப்படி என்பது குறித்தும் அதிகாரிகள் தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டனர். ஒத்திகை நிகழ்ச்சியை காண பொதுமக்கள் ஏராள மானோர் அந்த பகுதியில் திரண்டு இருந்தனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலி ருந்து ஒத்திகை நிகழ்ச்சி முழுவதையும் அதிகாரிகள் கண்காணித்தனர்.

    ஒத்திகை நிகழ்ச்சி குறித்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி இன்று 5 இடங்களில் நடக்கிறது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படு கிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வெள்ளம் பாதித்த பகுதி களில் மின் இணைப்பு, ஜெனரேட்டர் வசதி, சாப்பாடு வசதிகள், குடிநீர், கழிவறை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×