என் மலர்
ஈரோடு
ஈரோடு அருகே செல்போன்கள் திருடிய சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சுண்ணாம்பு ஓடை ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் முகிலன் (வயது 38). இவர் பி.பி.அக்ரஹாரம் காமராஜ் நகர் பஸ் நிறுத்தம் அருகில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முகிலன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிச்சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 7 செல்போன்கள், சார்ஜர் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து முகிலன் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் திருட்டில் ஈடுபட்ட லக்காபுரம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சங்கர் (23), பெரிய அக்ரஹாரம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், திருமூர்த்தி (22), காஜாமைதீன் (26), அபுபக்கர்சித்திக் (23) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் பி.பி.அக்ரஹாரம் உதுமான்சா வீதியில் உள்ள ஓங்காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்ற வழங்கிலும் சங்கர், அபுபக்கர் சித்திக் மற்றும் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோட்டில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யபடுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஈரோடு:
சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அக்ரஹாரம் மின் பாதையில், நெடுஞ்சாலையில் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதனால் ஈரோடு சத்தி ரோடு, அக்ரஹாரம் இணைப்பு சாலை, பி.கே.டி.நகர், ராஜீவ்நகர், பிச்சாங்காடு, நந்தவன தோட்டம், ஞானபுரம், பச்சப்பாளி மேடு, பச்சாயி தோட்டம், கே.ஆர்.குளம், அருள் வேலவன் நகர், சூளை, கந்தையன் தோட்டம், வி.ஜி.பி. நகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு ஜான்சி நகரில் குண்டும், குழியுமான ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் வீதியில் ரோடு குண்டும் -குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் வாகனங்களை ஓட்ட முடியாமல் தடுமாறியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்வதையும் காண முடிகிறது.
எனவே ஜான்சி நகரில் குண்டும், குழியுமான ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடம்பூர் போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் வினியோகம் செய்யப்பட்டது.
டி.என்.பாளையம்:
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீசார் கலந்து கொண்டு கடம்பூர் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோடு மற்றும் கோபி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு ஆனைக்கல்பாளையம் ரிங் ரோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
எனினும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்து முன்னணி சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்று காலை ஈரோடு தாலுகா போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக அங்கு திரண்டு வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இப்படி கூட்டமாக கூடி வருவதும், டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதும் தவறு. இதை மீறி முற்றுகையிட்டால் நீங்கள் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.
இதனால் பொதுமக்கள் அங்கிருந்து ரிங்ரோடு பகுதிக்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மேலும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார், ‘இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்குள் செல்லும் முக்கிய சாலையின் வழியாக டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் பெண்களிடம் கூறும்போது, ‘இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளியுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் கோபி ஆர்.டி.ஓ.விடம் மனு அளிக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மொடக்குறிச்சி ஆகிய 4 பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஓமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 23 ஊராட்சிகள் மற்றும் அவல்பூந்துறை, அறச்சலூர், வடுகபட்டி, மொடக்குறிச்சி ஆகிய 4 பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஓமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அதிகாரிகளிடம் வழங்கினார். இதையொட்டி ஒரு குடும்பத்துக்கு தேவையான முககவசங்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னிமலையில் கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பாமகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் துணைத்தலைவர்கள் எஸ்.எல்.பரமசிவம், என்.ஆர்.வடிவேல், மாவட்ட செயலாளர்கள் பி.டி.ராசு, பிரபு மற்றும் கட்சியினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
சென்னிமலை பகுதியில் உள்ள கிராமங்களில் அரசு விதிகளை மீறி கனிம வளங்களை கடத்தி வேறு பகுதியில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள். பிரசித்தி பெற்ற சென்னிமலை கோவிலின் அடிவாரத்தில் பாறைகள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த பகுதியில் எந்திரங்களை கொண்டு சுரண்டப்படுகிறது. இதனால் சென்னிமலையில் கோவில் உள்ள மலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கீழடிக்கு நிகரான கொடுமணல் பகுதிக்கு சிறிது தூரத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து வருவாய் துறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பசுவப்பட்டி, வெப்பிலி, முருங்கத்தொழுவு, சிறுகளஞ்சி, காசிபாளையம், பனியம்பள்ளி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
குடிப்பழக்கத்தை கைவிட முடியாத மகனால் மனமுடைந்த மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் இறந்த சோகத்தில் அவருடைய மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அருகே கராண்டிபாளையத்தை சேர்ந்தவர் சென்னிமலை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி ருக்குமணி (வயது 70). இவருடைய மகன் முத்துசாமி (40). திருமணம் ஆகவில்லை.
முத்துசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு மேலும் குடிக்க தொடங்கினார். குடிப்பழக்கத்தை கைவிட ருக்குமணி எவ்வளவோ வலியுறுத்தியும் முத்துசாமியால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.
தன்னுடைய ஒரே மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டானே என ருக்குமணி வருத்தம் அடைந்தார். மேலும் வயது மூப்புடன் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை காரணமாக ருக்குமணிக்கு உடல் நலமும் சரியில்லாமல் போனது.
இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட ருக்குமணி இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி அதில் தூக்குப்போட்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த முத்துசாமி தன்னுடை தாய் தூக்குப்போட்டு கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனே பதற்றத்துடன் அவர் கயிற்றை அறுத்து தன்னுடைய தாயை மீட்டு வீட்டில் உள்ள தரையில் கிடத்தினார். அப்போது அவர் மூச்சற்று பிணமாக கிடந்ததை கண்டதும் தாயின் உடலில் மீது விழுந்து முத்துசாமி கதறி அழுதார்.
குடிப்பழக்கத்தை கைவிட முடியாத தன்னால்தானே தூக்குப்போட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு தானே காரணமாகி விட்டதை எண்ணி முத்துசாமி மனம் நொந்தார். தாய் தற்கொலை செய்து கொண்டதை தாங்கி கொள்ள முடியாத அவர் அழுது புலம்பினார். தனக்காக உயிரை விட்ட தாய் இல்லாத உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்து என்ன செய்துவிடப்போகிறோம் என்ற முடிவுக்கு முத்துசாமி வந்தார். மனதை கல்லாக்கி கொண்டு அருகில் உள்ள தண்ணீர் இல்லாத 80 அடி ஆழ கிணற்று பகுதிக்கு வந்தார். வறண்டு கிடந்த அந்த கிணற்றுக்குள் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அடுத்தடுத்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீனாபுரம் பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கடத்தூர்:
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். எஞ்சியுள்ள மாணவர்களும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கும் தேர்வு நடத்திட அரசு தயாராக உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் சேவைகளை போன்று, பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கும் வகையில் தற்போதைய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் உள்ளதால் பெற்றோர்களின் கருத்து அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை பெற்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். எஞ்சியுள்ள மாணவர்களும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கும் தேர்வு நடத்திட அரசு தயாராக உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் சேவைகளை போன்று, பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கும் வகையில் தற்போதைய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் உள்ளதால் பெற்றோர்களின் கருத்து அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை பெற்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான்
பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலைனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான்
பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலைனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் 1,000 டன் நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு வந்தது.
ஈரோடு:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் 1,000 டன் நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு வந்தது. இந்த ரெயிலில் உள்ள நெல் மூட்டைகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலமாக நேற்று நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசி ஆலைகளுக்கு நெல் அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் மினிலாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் காசுக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் குணபிரசாத் (வயது 25). தையல் தொழிலாளி. இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் நல்லசிவம் (26) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். குணபிரசாத்துக்கும், நல்லசிவத்துக்கும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் 2 பேரும் நேற்று மதியம் ஈரோடு வருவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் திங்களூரில் இருந்து புறப்பட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளை குணபிரசாத் ஓட்டினார். பின்னால் நல்லசிவம் உட்கார்ந்து இருந்தார். அவர்கள் ஈரோடு நசியனூர்ரோடு வில்லரசம்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தார்கள்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய குணபிரசாத் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே ஈரோட்டில் இருந்து நசியனூர் நோக்கி சென்றுகொண்டு இருந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குணபிரசாத், நல்லசிவம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்த குணபிரசாத், நல்லசிவம் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






