என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  செல்போன்கள் திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு அருகே செல்போன்கள் திருடிய சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஈரோடு:

  ஈரோடு சுண்ணாம்பு ஓடை ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் முகிலன் (வயது 38). இவர் பி.பி.அக்ரஹாரம் காமராஜ் நகர் பஸ் நிறுத்தம் அருகில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முகிலன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிச்சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 7 செல்போன்கள், சார்ஜர் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

  அதைத்தொடர்ந்து முகிலன் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் திருட்டில் ஈடுபட்ட லக்காபுரம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சங்கர் (23), பெரிய அக்ரஹாரம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், திருமூர்த்தி (22), காஜாமைதீன் (26), அபுபக்கர்சித்திக் (23) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் பி.பி.அக்ரஹாரம் உதுமான்சா வீதியில் உள்ள ஓங்காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்ற வழங்கிலும் சங்கர், அபுபக்கர் சித்திக் மற்றும் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
  Next Story
  ×