என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டும் -குழியுமான சாலை
    X
    குண்டும் -குழியுமான சாலை

    ஈரோடு ஜான்சி நகரில் குண்டும் -குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    ஈரோடு ஜான்சி நகரில் குண்டும், குழியுமான ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் வீதியில் ரோடு குண்டும் -குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் வாகனங்களை ஓட்ட முடியாமல் தடுமாறியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்வதையும் காண முடிகிறது.

    எனவே ஜான்சி நகரில் குண்டும், குழியுமான ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×