என் மலர்
ஈரோடு
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் அணை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அந்தியூர் அருகே உள்ள கல்லுப்பள்ளம், கும்பரவானி மற்றும் வரட்டுப்பள்ளம் ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 11 மணியளவில் வரட்டுப்பள்ளம் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடியை எட்டியது.
அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரி நீர் வெயியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வலது மற்றும் இடதுகரை வழியாக அந்தியூர் மற்றும் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் அணை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 48.8 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இடி-மின்னலுடன் மழை கொட்டியதால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் சிட்டாசாலை என்னும் இடத்தில் ரோட்டோரம் இருந்த ஒரு பனை மரத்தை இடி தாக்கி தீ பிடித்து எரிந்தது.
இதேபோல் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது.
தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி, கல்மண்டிபுரம், தொட்ட முதிகரை, கணேசபுரம், சோளகர்தொட்டி , இட்டரை, காளிதிம்பம், பெஜலட்டி மற்றும் வனப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் அங்கு இருந்த ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மக்காசோள பயிர்கள் மண்ணில் சாய்ந்தது. உருளைக்கிழங்கு மற்றும் வாழை தோட்டத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியது.
இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த உருளைக் கிழங்கு அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்மண்டிபுரத்தில் இருந்து சோளகர்தொட்டி செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தை மழை நீர் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கும்பாரகுண்டி அருகே உள்ள தரைபாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் இரு கரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு மழை நீர் வடிந்த பிறகு வாகனங்கள் சென்றன. தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

இதேபோல் கொடுமுடி, பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-23, கொடுமுடி-18.2, பெருந்துறை-14.2, பவானி-27.6, கோபி-35.8, சத்தி-3, பவானிசாகர்-7.2, தாளவாடி-12.5, நம்பியூர்-4, சென்னிமலை-22, மொடக்குறிச்சி-24, எலந்தகுட்டைமேடு-44, கவுந்தப்பாடி-18, அம்மாபேட்டை-27.6, கொடிவேரி-7.2, குண்டேரிபள்ளம்-14.2, வரட்டுப்பள்ளம்-42.8.

ஈரோடு மாவட்டம் முழுவதும் மது விற்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 772 மது பாட்டில்களும், சுமார் 2 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
மிலாது நபியையொட்டி நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.
இதில் மாவட்டம் முழுவதும் மது விற்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 772 மது பாட்டில்களும், சுமார் 2 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 6-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) 2 நாட்கள் நடக்கிறது. இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியாக இருந்தால் 84 நாட்கள் நிறைவடைந்த பிறகும், கோவேக்சின் தடுப்பூசியாக இருந்தால் 28 நாட்கள் நிறைவடைந்த பிறகும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள உணவு கட்டுப்பாடு ஏதுமில்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 18 வயது நிரம்பிய பொதுமக்கள் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வங்கி பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு மஞ்சுபார்கவி (26), வித்யபாரதி (24) என்ற 2 மகள்கள் உள்ளனர். திருமூர்த்தி விபத்தில் இறந்து விட்டார்.
மூத்த மகள் மஞ்சுபார்கவிக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் வித்யபாரதி சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வித்யபாரதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் வேலையை விட்டுவிட்டு புளியம்பட்டிக்கு வந்து விட்டார். வீட்டில் இருந்து வந்த அவர் வேலைக்கு செல்ல முடியாததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அதற்கு அவரது தாயார் பொன்மணி திருமணத்துக்கு பின்பு வேலைக்கு செல்லலாம் என ஆறுதல் கூறி வந்தார்.
நேற்று பொன்மணி தனது மூத்த மகள் மஞ்சுபார்கவியுடன் சத்தியமங்கலத்துக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் வித்யபாரதி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வித்யபாரதியை மீட்டு புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் வித்யபாரதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடலை புளியம்பட்டி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அவலாஞ்சி பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இன்று காலை 8 மணி முதல் பவானிசாகர் அணைக்கு வர தொடங்கியது.
காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 23 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும், அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனத்துக்கு 500 கனஅடியும், பவானி ஆற்றில் 3 ஆயிரத்து 200 கனஅடியும் திறந்து விடப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மற்றொரு நடவடிக்கையாக தினமும் கொரோனா பரிசோதனையும் அதிகளவில் நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.
ஆரம்ப சுகாதார மையங்கள், சிறப்பு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தவிர 4 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் 24 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த 18-ந்தேதி வரை மொத்தம் 17 லட்சத்து 50 ஆயிரத்து 653 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 12 லட்சத்து 86 ஆயிரத்து 981 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 63 ஆயிரத்து 672 பேரும் போட்டுக் கொண்டுள்ளனர்.
இதேபோல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மற்றொரு நடவடிக்கையாக தினமும் கொரோனா பரிசோதனையும் அதிகளவில் நடந்து வருகிறது. இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 19 லட்சத்து 12 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தீபாவளியையொட்டி துணிகளை வாங்குவதற்காக கடை வீதிகளில் தற்போது அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் முககவசம் அணிந்து கொள்வதில்லை. மேலும் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்து அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் செப்டம்பர் வரை இடையிலான காலகட்டத்தில் ரேசன் அரிசியை கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் என மொத்தம் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக வெளிமாநிலங்களுக்கு குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ரேசன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் குறைந்த விலையில் ரேசன் அரிசியை வாங்கி அதை கடத்தி சென்று வெளிமாவட்டங்களுக்கு, வெளி மாநிலங்களுக்கு அதிக விலையில் விற்று வருகின்றனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர்கள், வாகனங்களில் ரேசன் அரிசி கடத்திச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேசன் அரிசியை கடத்தியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஜனவரி முதல் செப்டம்பர் வரை இடையிலான காலகட்டத்தில் ரேசன் அரிசியை கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் என மொத்தம் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 50 டன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரேசன் அரிசி கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் 15, கார், லாரிகள் 20 என மொத்தம் 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் 1 டன் சம்பங்கி பூக்களை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் கொட்டிவிட்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அங்கு நேற்று சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.10-க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் தாங்கள் மூட்டைகளாக கட்டி சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 1 டன் சம்பங்கி பூக்களை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையோடு குப்பையாக கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தோட்டத்தில் உள்ள பூக்களை கூலி கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து பறித்து மூட்டைகளாக்கி சரக்கு வேனில் கொண்டு வந்தால், அதற்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றாலும் எங்களுக்கு எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. எனவே மன வருத்தத்தோடுதான் இந்த பூக்களை குப்பையோடு குப்பையாக கொட்டுகிறோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது,’ என்றனர்.

பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோபி:
பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் கோபி, சத்தி, நம்பியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள்.
மேலும் கோவை, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தடுப்பணையில் குளித்து விட்டு இங்கு மீன் வகைகளை ருசித்து சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.
இதற்காக தினமும் பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. எனவே அணைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் அணைக்கு வந்தனர். அணையின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் கொம்பையா. இவருடைய மனைவி இந்திராணி (வயது 47). இவரும், இவருடைய உறவினர் முருகன் என்பவருடைய மகள் பிரியாவும் (21). சூளை பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் 2 பேரும் ஒன்றாக வேலைக்கு நடந்து சென்றனர்.
டிபார்மென்டல் ஸ்டோர்ஸ் அருகில் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் இந்திராணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். பிரியா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இந்திராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரியாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாநகர் பகுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு குழுவினர் வீடு வீடாக சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியில் பின்புறம் தேங்கியுள்ள கழிவு நீர் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா?, வீடுகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் நிலத்தடியில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக மூடப்பட்டுள்ளதா? சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
அப்போது சுத்தப்படுத்தாமல் கிடக்கும் பகுதிகளை சுத்தப்படுத்தியும், ஏ.டி.எஸ். கொசுப்புழு ஒழிப்பு பணியிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து வாரத்தில் 2 முறை தெளிக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் வில்லரசம்பட்டி, புதுமைக்காலனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாரம் புதிதாக 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவா் கூறினார்.