என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varattupallam dam"

    • யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
    • வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை வரட்டுப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி வரட்டுப்பள்ளம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை கூட்டங்களும் வரட்டுப்பள்ளம் அணையை நோக்கி படையெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே பர்கூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 33.46 அடியாகும். பர்கூர் மேற்கு மலைப்பகுதியில் மழை பெய்யும்போது கும்பரவாணி பள்ளம், கள்ளுப்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்து சேரும்.

    கடந்த 15 நாட்களாக பர்கூர் மேற்கு மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 3 ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் நேற்று காலை வரட்டுப்பள்ளம் அணை தன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியது. இதனால் அணை நிரம்பி வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேறுகிறது. இந்த தண்ணீர் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு செல்கிறது.

    ×