வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் குட்டிகளுடன் படையெடுக்கும் யானை கூட்டங்கள்- வனத்துறையினர் எச்சரிக்கை

யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் குட்டிகளுடன் படையெடுக்கும் யானை கூட்டங்கள்- வனத்துறையினர் எச்சரிக்கை
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை வரட்டுப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி வரட்டுப்பள்ளம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.

தற்போது தொடர் விடுமுறை காரணமாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை கூட்டங்களும் வரட்டுப்பள்ளம் அணையை நோக்கி படையெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com