search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி இருக்கும் காட்சி.
    X
    வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி இருக்கும் காட்சி.

    வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி

    வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் அணை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அந்தியூர் அருகே உள்ள கல்லுப்பள்ளம், கும்பரவானி மற்றும் வரட்டுப்பள்ளம் ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 11 மணியளவில் வரட்டுப்பள்ளம் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடியை எட்டியது.

    அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரி நீர் வெயியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வலது மற்றும் இடதுகரை வழியாக அந்தியூர் மற்றும் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் அணை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    Next Story
    ×