என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.

    அம்மாபேட்டை:

    மேட்டூர் அணைக்கு கடந்த 50 நாட்களுக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்க ப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    வெள்ள அபாயம் நிலவியதால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

    தற்போது ஆற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் இன்று முதல் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    கடந்த 50 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.

    • சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 775 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.18,428-க்கு விற்பனை ஆனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,640 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 50 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 75 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 775 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.18,428-க்கு விற்பனை ஆனது.

    ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சாணார் பாளையம், மேட்டுக்கடை, நத்தக்காட்டு பாளையம், புங்கம்பாடி, அரவிளக்கு மேட்டுப்பாளையம், சாலைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
    • இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது.

    இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதாலும், சாலை சிதிலமடைந்ததாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ரூ. 50 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கியது.

    இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர், சென்னிமலை ரோடு வழியாக ஈரோடு ரெயில் நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

    இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து சில பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அந்த வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    வழக்கம்போல ஈரோடு கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் ஒருவழி பாதையாக அனுமதிக்கப்படுகின்றன. விரைவில் இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:

    ரெயில்வே நுழைவு பாலத்தில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடை ந்துள்ளன. மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சில நாள்களாக பலத்த மழை பெய்தபோதும் அங்கு தண்ணீர் தேங்கவில்லை. இனி முன்பு போல அங்கு தண்ணீர் தேங்காது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

    தற்போது சாலை நடுவில் கொஞ்சம் கசிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. மேலும் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் சாலை யில் கான்கிரீட் தளங்களுக்கு இடையே உள்ள சிறிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ள்ளாவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    அதையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிவடையும் என எதிர்பா ர்க்கிறோம். அதன்பின், வழக்கம்போல ரெயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கணவன்-மனைவி2 பேரும் மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
    • அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்த வர் சங்கரன். (வயது 72). விவசாயி. இவரது மனைவி ருக்மணி (65).

    இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் காமராஜ் நகர் பிரிவு அருகே வந்தனர்.

    அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது. இதில் கணவன்- மனைவி இரு வரும் தூக்கி வீசப்பட்டு படு காயம் அடைந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

    சங்கரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அத்தாணி பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரில் மண்வளம் பாதுகாப்பு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
    • இதில் காவேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரில் மண்வளம் பாதுகாப்பு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் காவேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை பூ நறுமண ஆலை அமைக்க வேண்டும். குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளை ஏற்றுமதி நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட ஏற்றுமதி முனையத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும்

    வாழை மற்றும் பழங்கள் வகைகள் அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    உரத்தட்டுப்பாடு மிக தீவிரமாக உள்ளது. உரம் விலை ஏற்றம் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இணை ஈடுபொருட்கள் கிடைத்தால் மட்டுமே யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைக்கும் என நிலை தொடர்கிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஒருங்கிணைந்த கூட்டுறவு நிறுவனம் மத்திய அரசு அறிவித்ததை வரவேற்கி றோம். அதை விரைவில் நடைமுறை ப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி அணைக்கும் முறை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், எண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும், அவசர காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோபி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோபி முன்னணி தீயணைப்பு வீரர் கோபால், ராமச்சந்திர மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தி, சுரேஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் போது தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முறை, தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்கை பயன்படுத்தி தீ அணைக்கும் முறை, மணலை பயன் படுத்தி தீயை அணைக்கும் முறை போன்றவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடர்பான பதி வேடுகள் மற்றும் தொடர்புடைய கோப்புகள், படைக்கல உரிமம், வெடிபொருள் உரிமம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் கோப்புகள், அரசு நிலங்களில் ஏற்படுத்த ப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகள், நிலவரி இனங்கள் தொடர்பான கோப்புகள், நிலம், கனிமம் மற்றும் பதிவறை தொடர்பான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    இதனையடுத்து கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிக ளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், பட்டா மேல் முறையீட்டு நடவடிக்கைகள் குறித்தும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாகவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பான பணி முன்னேற்றம் மற்றும் தணிக்கை பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து சத்திய மங்கலம் நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தை வளாகத்தில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டிட கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரிய தர்ஷினி, தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), ரவிசங்கர் (சத்தியமங்கலம்), சத்தியமங்கலம் நகராட்சி ஆணை யாளர் சரவணக்குமார் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கைத்தறி நெசவாளர்கள் இன்றளவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க பெறாமல் சிரம நிலையிலேயே வாழ்க்கை உள்ளது.
    • நெசவாளர் பசுமைவீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி நெசவாளர் நலன் காக்க வேண்டும்

    சென்னிமலை:

    கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவின தொகையினை அதிகரித்து வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், தி.மு.க., மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவாளர்கள் இன்றளவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க பெறாமல் சிரம நிலையிலேயே வாழ்க்கை உள்ளது. நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவினங்களுக்கான தொகை 2012-ம் ஆண்டு வழங்கபட்டது.

    கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்திக்கு முந்தைய செலவினதொகை பலமடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் உடனடியாக நெசவாளர்களுக்கு குறைந்தது 50 சதவீதம் அளவிற்கு உற்பத்திக்கு முந்தைய செலவினதொகை உயர்த்தி வழங்க ஆவண செய்ய வேண்டும்.

    உற்பத்திக்கு முந்தைய செலவின தொகை சங்கங்களின் நிதி ஆதாரத்திலேயே வழங்கபடுவதால் இதன்மூலம் அரசிற்கு எவ்வித நிதிச்செலவும் இல்லை என்பதினையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    தற்சமயம் கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவொரு மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடைமுறையில் இல்லை. நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையோருக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் உள்ளது. குறைந்தது மாதம் ரூ. 500 முதல் ரூ. 1000 வரை மருத்துவ செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே உடனடியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நெசவாளர் பசுமைவீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி நெசவாளர் நலன் காக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கொடுக்க சொன்னார்கள்.
    • சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் செல்வராஜ் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார் (35). அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக சதீஷ்குமாரை அணுகி உள்ளார்.

    அப்போது சதீஷ்குமார் பட்டா மாறுதல் செய்து தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத செல்வராஜ் இது பற்றி கருங்கல்பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கொடுக்க சொன்னார்கள்.

    அதன்படி சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் செல்வராஜ் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அலுவலகத்தில் நுழைந்து சதீஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தார்கள். மேலும் லஞ்சம் பெற இடைத்தரகராக செயல்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகரில் இருக்கும் சதீஷ்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சதீஷ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    • ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஒட்டன் சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டு ப்பாளையம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் காய்கறிகள் விற்பனை க்கு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    கேரட்டை பொருத்த வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பீன்ஸ்-80, பீட்ரூட்-50-70, சவ்சவ்-30, குடைமிளகா-60, கோவக்காய்-40, கருணைக்கிழங்கு-40, தக்காளி-40, பீர்க்கங்காய்-60, முள்ளங்கி, பாவக்காய், புடலங்காய், வெண்டைக்காய்-40, முருங்கைக்காய் -60, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-40, இஞ்சி-70, முட்டைகோஸ்-25, கருப்பு அவரைக்காய்-90, பட்டை அவரைக்காய்-60, காளிப்ளவர்-50.

    இன்னும் சில நாட்கள் காய்கறிகள் விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு சரியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சாவடிபாளையத்துக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து சாவடிபாளையத்துக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×