ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.மொத்தம் 775 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.18,428-க்கு விற்பனை ஆனது.
ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,640 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 50 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 75 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 775 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.18,428-க்கு விற்பனை ஆனது.

X

Maalai Malar
www.maalaimalar.com