search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடர்பான பதி வேடுகள் மற்றும் தொடர்புடைய கோப்புகள், படைக்கல உரிமம், வெடிபொருள் உரிமம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் கோப்புகள், அரசு நிலங்களில் ஏற்படுத்த ப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகள், நிலவரி இனங்கள் தொடர்பான கோப்புகள், நிலம், கனிமம் மற்றும் பதிவறை தொடர்பான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    இதனையடுத்து கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிக ளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், பட்டா மேல் முறையீட்டு நடவடிக்கைகள் குறித்தும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாகவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பான பணி முன்னேற்றம் மற்றும் தணிக்கை பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து சத்திய மங்கலம் நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தை வளாகத்தில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டிட கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரிய தர்ஷினி, தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), ரவிசங்கர் (சத்தியமங்கலம்), சத்தியமங்கலம் நகராட்சி ஆணை யாளர் சரவணக்குமார் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×