என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்யா ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஈரோடு ரெயில் நிலையத்தில் போதுமான அளவு கண்காணிப்பு கேமிராக்கள் பயன்பாட்டில் உள்ளது.

    ஈரோடு, செப். 22-

    தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்யா ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் நடைமேடை பகுதிகள், டிக்கெட் கவுண்டர் மற்றும் ரெயில்வே பணிமனை பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மால்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நடந்த ஆய்வில் ரெயில்வே துறையின் சொத்துகள், ஊழியர்களின் பணித்திறன் மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ரெயில்நிலைய நடைமேடைகள், காவிரி ரெயில்வே பாலம் மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் எந்திரங்கள், லோகோ பைலட்டுகளின் அறை உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது. ஆய்வில் அனைத்தும் திருப்திகரமாக இருந்தது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் போதுமான அளவு கண்காணிப்பு கேமிராக்கள் பயன்பாட்டில் உள்ளது. ரெயிலில் முன் பதிவு செய்தவர்கள் வராத நிலையில், அடுத்ததாக காத்திருப்போர் பட்டியிலில் உள்ள பயணிகளுக்கு, ஆன்லைன் மூலம் படுக்கை ஒதுக்கீடு செய்யும் எந்திரம் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கான 800 கையடக்க கருவிகள், பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்முறையால் பயணி களுக்கு வெளிப்படைத் தன்மையுடன், படுக்கை வசதி ஒதுக்கீடு செய்து தரப்படுவதால், பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

    பொதுவாக ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள் அறையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை. பெண்களும் தற்போது லோகோ பைலட்களாக பணிபுரியும் நிலையில் அவர்களின் சிரமங்களை நாங்கள் உணர்ந்து ள்ளோம்.

    இந்நி லையில் சில இடங்களில் சோதனை அடிப்ப டையில் லோ கோ பைலட் அறையில் கழிப்பறை வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவை பயன்பாட்டுக்கு ஏற்றதாய் இல்லை என தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் இப்பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மேம்பாலம் கட்டுவது தொடர்பாக மாநில அரசு திட்டம் தீட்டி பரிந்துரைத்தால் ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
    • அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் திலகா (51). இவரது கணவர் பெருமாள். இவர்களுக்கு விஜய் (27) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக திலகா கர்ப்பப்பை யில் கட்டி கார ணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள் இறந்து விட்டார்.

    இதனால் திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை விஜய் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் திலகா மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக விஜய் வீட்டுக்கு வந்தார். அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    அவரது அருகே சாணி பவுடர் பாக்கெட் திறந்த நிலையில் இருந்தது. இது பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் தாயை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திலகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜம்பையில் இருந்து கொங்கர்பாளையத்திற்கு மக்காச்சோளம் தட்டு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டு இருந்தது.
    • அத்தாணி-சத்தி ரோட்டில் வந்த போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்ததில் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி-சத்தி ரோட்டில் ஜம்பையில் இருந்து கொங்கர்பாளையத்திற்கு மக்காச்சோளம் தட்டு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டு இருந்தது.

    லாரியில் கொங்கர் பாளையத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அர்ஜூனன், முத்துசாமி, ராசன், விஜயா, முருகேசன், சுந்தரி, சாந்தி, பழனிச்சாமி மற்றும் வாணிப்புத்தூரை சேர்ந்த டிரைவர் சபேஷ்குமார் உள்பட 9 பேர் வந்தனர்.

    அப்போது அத்தாணி-சத்தி ரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் மினி லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லாரியின் பின்பக்கத்தில் சோளத்தட்டு பாரத்தின் மேல் அமர்ந்து இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். தொழிலாளிகள் உள்பட 9 பேருக்கும் இடுப்பு மற்றும் கால்களில் அடிபட்டு காயம் எற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சித்தோடு நடுப்பாளையத்தை மணிகண்டன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
    • இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

     பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சித்தோடு நடுப்பாளையம் மணிகண்டன் (42) என்பதும், செல்போனில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பரிசு விழும் எனக் கூறி எண்கள் அனுப்பியும், வெள்ளை தாள்களில் எண்கள் எழுதி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    • பழனிச்சாமி தனது தம்பி செல்லமுத்துக்கு சாப்பாடு எடுத்து வந்து அவரது தோட்டத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
    • இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆணின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது.
    • கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.
    • இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே அய்யம்பாளையம்  ஒரத்துப்பாளையம் சாலையில் சோளியம்மன் கோவில் அருகே கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற சென்னிமலை போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இறந்த மூதாட்டி திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா பாறவலசு பகுதியை சேர்ந்த சுப்பராயன் மனைவி சுந்தரி (64) என்பதும், தற்போது சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • தடையின்றி தொடர்ந்து 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அமைச்சர் சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • விவசாயிகள் சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் தொட்டம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சி–யில் இருந்து சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள பாலதொழுவு, பனியம் பள்ளி, ஓட்டப் பாறை மற்றும் புதுப்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் அமைத்து மின் மோட்டார்களை பயன் படுத்தி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இதற்காக தங்கு, தடையின்றி தொடர்ந்து 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அமைச்சர் சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை ஏற்று அன்று முதல் தொடர்ந்து இதுவரை சென்னிமலை அருகே பெரியாண்டிபாளையத்தில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து புதுப்பாளையம், அய்யம் பாளையம், திப்பம் பாளையம், வெங்கமேடு, ஓலப் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க கிழமை) இரவில் இருந்து 12 மணி நேர மும்முனை மின்சாரம் மட்டும் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் தொட்டம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது மின்வாரிய உயர் அதிகாரிகள் விவசாயிகளை தொடர்பு கொண்டு, இது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பெருந்துறை மின்வாரிய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருந்தனர். இதையடுத்து விவசாயிகள் பெருந்துறையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர்.

    அங்கு விவசாயிகளிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி–னார்கள். இந்த நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் அமைச்சர் சாமிநாதனை தொடர்பு கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தகவலை தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குடிநீர் தேவைக்காக இதுவரை 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்கியது போல் தொடர்ந்து இனிமேலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதனை ஏற்று கொண்ட மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    • கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    ஆய்வாளர் தேன்மொழி முன்னிலையில் 20 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன.

    திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் குழுவினர், சென்னிமலை மகளிர் குழுவினர், பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    • கோவையில் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயிலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
    • அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) போலீசார் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் உள்ள தலைமை அலுவலகம், கோவை என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயிலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கை கண்டித்தும், சோதனையை கண்டித்தும் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று ஒரே நேரத்தில் 5 இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் கைதி நடவடிக்கையையும், சோதனை நடவடிக்கையும் கண்டித்து திடீரென பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 10-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து மறியல் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோட்டில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களும், வெளியூரிலிருந்து ஈரோட்டுக்கு வரக்கூடிய வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மணிக்கூண்டு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே, பி.பி. அக்ரஹாரம் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தனித்தனி குழுவாக பிரிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த பகுதிகளிலும் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இன்று ஈரோடு மாநகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா (36).இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். தினமும் எடப்பாடியில் இருந்து கருங்கல்பாளையத்திற்கு வந்து சென்றார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் ராஜா பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வரை உடன் பணிபுரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 719-க்கு விற்பனை நடை பெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 7 ஆயிரத்து 665 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 5 காசுக்கும், சராசரி விலை யாக 23 ரூபாய் 60 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3 ஆயிரத்து 352 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 78 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதேபோல் கொப்பரை தேங்காய்கள் 13 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 50 காசுக்கும், சராசரி விலையாக 73 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 616 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 44 ஆயிரத்து 979 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 719-க்கு விற்பனை நடை பெற்றது.

    • கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    கோபி:

    கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சதாசிவம் ஆகியோர் தலைமை தாங்கி னர். பெருந்துறை குமார் வரவேற்றார்.

    இதில் அரசு பணியாளர்க ளுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்கப்படுவது போல ரேசன் கடை பெண் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்த செயலாளர், மாநில பதிவாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ரேசன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் அறிக்கையில் அரசாணை எண்ணில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்து ரைகளை அமல்படுத்த வேண்டும்.

    மாநில பதிவாளர் அறிவிக்கப்பட்ட தேர்வு நிலை சிறப்பு நிலை குறித்து கமிட்டி அறிக்கை வெளியிட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    நுகர் பொருள் வாணிப கிடங்கு நுகர்வு பணியாளர், ரேசன் கடை பணியாளர்க ளுக்கு ஒரே மாதிரியான வேலை நேரம்அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    ×