என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகளை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    அப்போது தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கம் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனு வழங்கி காத்து இருக்கிறோம். 7 - 3 - 2019 -ம் ஆண்டு பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    பின்னர் 16.10.2019-ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கவிதா எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் விரைவில் விட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    அப்போது கொரோனா தொற்று காலமாக இருந்ததால் வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் இருந்தது.

    தற்போது அரசாணை எண் 24-ன் படி தமிழக முதல்  அமைச்சர் அறிவித்தபடி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • கீழ் பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து வந்தது.
    • இறந்தவருக்கு சுமார் 30 முதல் 35வயது இருக்கும் என்பது தெரியவந்தது.

    ஈரோடு, 

    ஈரோடு அடுத்த காஞ்சிக்கோவில் கண்ணவேலம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து வந்தது. இதையறிந்த கந்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோமதி, காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவருக்கு சுமார் 30 முதல் 35வயது இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    இறந்த வாலிபர் வெள்ளை நிற பனியனும், கருப்பு நிற டிராயர் அணிந்திருந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
    • 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக வரப்பாளையம் புது அய்யம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் (50), திங்களூர் நல்லம்பாட்டி எல்.பி.பீ. வாய்க்கால் பகுதியை சேர்ந்த சுந்தரம் (56), சென்னிமலை வெப்பிலி பிரிவு சாலையை சேர்ந்த பழனிசாமி (62), சித்தோடு

    ஆர்.என்.புதூர் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (74), அதே பகுதியை சேர்ந்த தனகேஸ்வரன் மனைவி கருப்பத்தாள்(48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
    • கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கோவில்களின் கம்பத்திற்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், தீர்த்த குடங்கள் எடுத்தும் வருகின்றனர்.

    பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகரமே களைக்கட்டி உள்ளது.

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு பெரிய மார்க்கெட் வியா பாரிகள் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    இதையொட்டி மார்க்கெ ட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ள்து. இதனால் இன்று காலை வ.உ.சி. காய்கறி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப ட்டது.

    • அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு,

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கபிலன் (30). இவர் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோவை செல்வதற்காக அவரது நண்பர் சத்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் மற்றும் அவரது நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான கபிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி ரேவதி (33). செவிலியர்.
    • அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரேவதி கிடைக்கவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி பா.நஞ்சகவுண்டன்பாளையம் வேங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரகுபதி( 42). பெயிண்டர்.

    இவரது மனைவி ரேவதி (33). செவிலியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ரேவதி கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் மீ்ண்டும் வீடு திரும்பவில்லை.

    அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரேவதி கிடைக்கவில்லை.

    இது குறித்து ரகுபதி கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வருகின்றனா்.

    • முதல் தினமும் கம்பம் நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • பண்ணாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து குவிந்துள்ளனர்.

    சத்தியமங்கலம், 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழாா கடந்த 20-ந்தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது.

    தொடர்ந்து பண்ணாரியம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுபுற கிராமங்களுக்கு ஊர்வலமாக சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வலம் வந்த சப்பரம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து கம்பம் சாட்டப்பட்டது. அன்று முதல் தினமும் கம்பம் நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர்.

    விழாவின் முக்கிய திருவிழாவான குண்டம் இறங்கும் விழா நாளை அதிகாலை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு குண்டம் இறங்க தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

    இதற்காக மலைபோல் விறகுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு குண்டம் ஏற்றப்படும். தொடர்ந்து விடிய, விடிய குண்டம் எரியூட்டப்பட்டு அதிகாலையில் குண்டம் இறங்கும் விழா நடைபெறும்.

    இதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி வழிபடுவார்கள்.

    இந்த குண்டம் விழாவில் பங்கேற்க கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, கூட்டு வண்டி, ரேக்ளா வண்டிகளில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து குவிந்துள்ளனர்.

    அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால் பண்ணாரியம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறையினரும் வனவிலங்குகள் கோவில் அருகே வராமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை.
    • நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நந்தினி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி நந்தினி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணைக்கும் கடந்த 2 வாரமாக ெபாதுமக்கள் வருகை அதிரித்து வருகிறது.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இந்த அணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக ரித்த வண்ணம் இருந்து வருகிறது.

    இதையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் நீர்நிலைகளை தேடி சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கும் கடந்த 2 வாரமாக பொதுமக்கள் வருகை அதிரித்து வருகிறது. அவர்கள் குடும்பத்துடன் வந்து வெயிலின் சூட்டை தணிப்பதற்காக அணையில் குளித்து சென்ற வண்ணம் உளள்னர்.

    இந்த நிலையில் விடுமுறை தினம் என்பதால் நேற்று கொடிவேரி அணை யில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.

    ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் என குடும்பத்துடன் வந்த மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பலர் வெயிலினால் தண்ணீரில் இருந்து வெளியே வராமல் அப்படியே நீண்ட நேரம் குளித்து கொண்டே இருந்தனர்.

    மேலும் நேரம் செல்ல செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் குளித்து விட்டு தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும், அங்கு விற்பனை செய்ய ப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதை யொட்டி நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்கொடிவேரிக்கு வந்திருந்தனர்.

    • குழந்தைகளின் நலன், ஆய்வக பராமரிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கினர்.
    • ஈரோடு மாநகராட்சியில் அகத்தியர் வீதி, நேதாஜி சாலை, சூரியம்பாளையம், வீரப்பன் சத்திரம்,

    ஈரோடு, 

    ஈரோடு மாநகரில் 10 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளன. தேசிய தர உறுதி குழுவை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகள் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    மருத்துவமனை சுகாதாரம், மருந்துகளின் இருப்பு, உள் நோயாளிகள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை, மருத்துவர்கள் செவிலி யர்கள் வருகை. நோயாளிகளுக்கு அடிப்படை வசதி, மகப்பேறு சிகிச்சைமுறை, குழந்தைகளின் நலன், ஆய்வக பராமரிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கினர்.

    மத்திய அரசின் சுகாதார துறை சார்பில் சமீபத்தில் தேசிய தரச்சான்று பெற்ற நகர்ப்புற, கிராமப்புற சுகாதார நிலையங்களின் பட்டியல் வெளியி டப்பட்டது.

    இதில் ஈரோடு மாநகராட்சியில் அகத்தியர் வீதி, நேதாஜி சாலை, சூரியம்பாளையம், வீரப்பன் சத்திரம், பெரிய சேமூர் 5 நகர்ப்புற சுகாதார நிலைய மும், மாவட்டத்தில் கோபி, பவானி, ஜம்பை, குத்தி யாலத்தூர், சித்தோடு ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலைய மும் தேசிய தரச் சான்றி தழுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளன. 

    • மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
    • மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக இருந்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 954 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    • சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
    • சம்பவத்தன்றும் சுரேஷ்குமா ருக்கு வலி ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி.

    சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி வலி தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் சுரேஷ்குமாருக்கு வலி ஏற்பட்டது. இதனால் மண்எண்ணை எடுத்து தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கமணி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணிரை ஊற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுரேஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×