என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார்.
    • பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர்.

    சென்னிமலை, 

    சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.

    பின்பு இன்று அதிகாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. அதை தொடர்ந்து சாமி புறப்பாடு காலை 6.10 மணிக்கு நடைபெற்றது.

    சாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்தது. தேர்நிலையில் வைக்கப்பட்டு தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார். அதை தொடர்ந்து காலை 6.20 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா... அரோகரா... முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என பக்தி கோஷங்களை எழுப்பினர்கள்.

    பின்பு தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு, ரத வீதிகள் வழியாக வலம் வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர். பின்பு இன்று மாலை தேர்நிலை சேரும்.

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை வியாழக்கிழமை காலை பரிவேட்டை நிகழ்ச்சியும். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வெள்ளிக்கிழமை காலை 8மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.

    • லட்சுமணன் குடிக்க வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
    • லட்சுமணன் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (70). சாயப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று லட்சுமணன் குடிக்க வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டுள்ளார். வீட்டில் பணம் கொடுக்க வில்லை.

    இதனால் லட்சுமணன் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இதனால் அவரது உறவினர்கள் லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு நிலைமை மேலும் மோசம் அடைந்ததால் மீண்டும் அவரை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லட்சுமணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடமானை துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியது தெரிய வந்தது.
    • வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென் பர்கூர் காப்புக்காடு வரட்டு ப்பள்ளம் அணை பீட் சரக வனப்பகுதியில் வனச்சர அலுவலர் உத்திரசாமி தலைமையில் வனவர்கள் சக்திவேல், திருமூர்த்தி மற்றும் வனக்காப்பாளர் சதீஸ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வரட்டு ப்பள்ளம் அணை பகுதியில் புதர் மறைவில் மறைந்திருந்த 2 பேரை வனத்துறை குழுவினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கோவிலூரை சேர்ந்த முருகேசன் (40), எண்ணமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் (44) என்பதும், இவர்கள் மற்றும் கோவிலூரை சேர்ந்த பிரபு , சடையப்பன், மந்தையை சேர்ந்த முருகேசன், விளாங்குட்டையை சேர்ந்த ராசு என 6 பேர் கொண்ட கும்பல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கடமானை துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியது தெரிய வந்தது.

    மேலும் கடமானை துண்டு, துண்டாக வெட்டி 4 சாக்குகளில் கட்டி வெளியே எடுத்து வரும் போது வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.

    அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு, சடையன், முருகேசன் மற்றும் ராசு ஆகிய 4 பேரும் வனப்பகுதி யில் சுட்டு கொன்ற கடமானின் கறி ,4 சாக்குகள் , துப்பாக்கி ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி மறைந்திருந்தனர்.

    இதில் வனத்துறையினரை கண்டு 2 பேர் தப்பி ஓடி விட்டதும், மற்ற 2 பேர் வனத்துறையினரிடம் சிக்கி கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனையடுத்து, முருகேசன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.

    • கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • அதிர்ஷ்டவசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே ஓடையா கவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை டாக்டர்.செந்தில்குமார் தனது காரில் மருந்து வாங்குவதற்காக ஊஞ்சல்பாளையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    ஓட்டர் கரட்டு ப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் அந்த பகுதியில் செந்தில்குமார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார். அந்த வழியாக சென்றவர்கள் செந்தில்குமாரை மீட்டனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் கார் பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.50 அடியாக குறைந்து உள்ளது.
    • அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.50 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 489 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது

    இதேபோல் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வேளாண் அடுக்கு திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் விவசாயிகள் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி, விவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று 'GRAINS' என்ற இணை யத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இத்தளத்தில் விவசாயிகளின் விபரம் இணைக்கப்படுவதால் வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, தோட்டக்க லை துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல் துறை, ஊரக வள்ர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

    தவிர நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவாகும். தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து தொடர்ந்து பலன்களை பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 15 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 5 பேர் பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ள னர்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 959 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 15 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தினசரி பாதிப்பு பதிவாகி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் தற்போது கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வர இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள். எனவே இது போன்ற விசேஷங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியு ள்ளனர்.

    • இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று சேவல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக நேற்று காலை சாமி புறப்பாடு நடந்தது, சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கு இருந்து சேவல் கொடியுடன் உற்ச மூர்த்திகள் முருகப்பெ ருமான் சமேதராக புறப்ப ட்டு படி வழியாக மலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் யாக பூஜை நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் பஞ்சாமிருதம், பால், தயிர் உட்பட பல்ேவறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சாமி களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமைக் குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் கொடி மரத்திற்கும் காப்பு கட்டி சிறப்பு பூஜை செய்ய சேவல் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு டவுன் கிழக்கு ராஜா வீதி கைலாசநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதையடுத்த நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி காலை மகா தரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பணியா ளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

    • பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை பின்பற்ற வேண்டும்.
    • கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு ஆவின் பால் நிறுவனம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயும், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாயில் இருந்து 51 ரூபாயும் வழங்க வேண்டும்.

    ஆவினுக்கு பால் வழங்கும் கறவை இனங்களுக்கு ஆவின் செலவில் இலவச காப்பீடு வசதி செய்து தரவேண்டும். கிராம சங்கங்களில் பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை பின்பற்ற வேண்டும்.

    கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். சங்கத்தில் பரிசோதனை செய்யபட்ட பாலின் தரம் அளவு அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி காலதாமதம் இன்றி பாலுக்கான பணம் பட்டுவாட செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அவர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பால் உற்பத்தியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் மலை அடிவார த்தில் பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்க காத்திருப்பு கூடம் கட்டும் பணியை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து மலை கோவிலுக்கு பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்கவும், காத்திருக்கவும் காத்திருப்பு கூடம் மலை அடிவாரத்தில் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கோவில் நிதி ரூ. 64 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி சென்னி மலை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ண ண்னுண்ணி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பூர் 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர்.எஸ்.செல்வம், யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம், பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபு, நகர செயலாளர் ராமசாமி, கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர்.
    • பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா 20-ந் தேதி இரவு புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று 28-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் நேற்று காலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது.

    மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம் பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

    பின்பு சரியாக 3.45 மணிமுதல் 4 மணிக்குள் கோவில் தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து அம்மன் சப்பரம் குண்டத்தில் இறங்கிய பின் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், ஆண், பெண் போலீசார், அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமிகள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர்.

    அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர்.

    குண்டத்தை சுற்றி தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    குண்டம் விழாவை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 6-ந்தேதி மஞ்சள் நீராடுதலும், 7-ந்தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறு கிறது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1500-போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.
    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் அதிக அளவில் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள், கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. ஆனால் இரவு 10 மணி முதல் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கி பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரட்டூர் நாயக்கன்காடு, மொடச்சூர், வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் 2 மணி நேரம் இடி உடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் இன்று காலையும் வானம் மேகத்துடன் காணப்பட்டது. கோபிசெட்டிபாளையம் பகுதியில் மட்டும் 9 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் இந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரி பள்ளம் அணை பகுதியில் 10 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் நேற்று 2-வது முறையாக குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. குண்டேரிபள்ளம் அணையின் முழு கொள்ளளவு 41.75 அடியாகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி குண்டேரிபள்ளம் அணைக்கு வினாடிக்கு 91 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 91 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் மாவட்டத்தில் தாளவாடி, அம்மாபேட்டை, பவானி, வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம், கொடிவேரி அணை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    தொட்டகாஜனூர், பாசூர், திகினாரை, அருள்வாடி,போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு திடீர் மழையால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டேரி பள்ளம்-100, கோபிசெட்டி பாளையம்-90.2, கொடிவேரி அணை-15.2, தாளவாடி-12.4, அம்மாபேட்டை-12.2, பவானி-6.4, வரட்டு பள்ளம்-4.8, சத்திய மங்கலம்-3.

    ×