என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரளி விதையை"

    • லட்சுமணன் குடிக்க வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
    • லட்சுமணன் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (70). சாயப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று லட்சுமணன் குடிக்க வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டுள்ளார். வீட்டில் பணம் கொடுக்க வில்லை.

    இதனால் லட்சுமணன் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இதனால் அவரது உறவினர்கள் லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு நிலைமை மேலும் மோசம் அடைந்ததால் மீண்டும் அவரை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லட்சுமணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×