வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

கீழ் பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து வந்தது.இறந்தவருக்கு சுமார் 30 முதல் 35வயது இருக்கும் என்பது தெரியவந்தது.
வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
Published on

ஈரோடு, 

ஈரோடு அடுத்த காஞ்சிக்கோவில் கண்ணவேலம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து வந்தது. இதையறிந்த கந்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோமதி, காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவருக்கு சுமார் 30 முதல் 35வயது இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இறந்த வாலிபர் வெள்ளை நிற பனியனும், கருப்பு நிற டிராயர் அணிந்திருந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com