என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.
    • போலீசார் வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்கா ர்த்திக் (29). இவர் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், துளசியம்மா ஆகியோரின் மகள் ஜோதி என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்துக்கு முன்பு திரு மணம் செய்து கொண்டார்.

    இவர்களது திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை. கடந்த மாதம் விக்னேஷ் கார்த்திக் கேரளா வுக்கு வேலைக்காக சென்று ள்ளார். மீண்டும் தனது சொந்த ஊரான திகனாரை கிராமத்துக்கு வந்துள்ளார்.

    அப்பொழுது விக்னே ஷ்கார்த்தியின் மாமனார் பால்ராஜ் மற்றும் மாமியார் துளசிம்மா, சிறுவன் என 3 பேர் சேர்ந்து விக்னேஷ்கார்த்தியின் வீட்டுக்குள் நுழைந்து விக்னேஷின் முகத்தில் மாமியார் மிளகாய் பொடியை தூவி உள்ளார்.

    பின்னர் மாமனார் பால்ராஜ் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் விக்னேஷ் கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் விக்னேஷ்கா ர்த்தியின் கை, கால், வயிற்று பகுதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைசூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 2 தனிபடைகள் அமைத்து தேடிவந்தனர்.

    அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் 3 பேரும் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தில் தனது வீட்டுக்கு வந்துள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் தாளவாடி போலீ சார்க்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்திக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் வீட்டை சுற்றி வளைத்து வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சத்தியமங்கலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டினுள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டுள்ளனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஒரிச்சேரி சக்தி மெயின் ரோட்டில் செல்லவேல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    நேற்று இவரின் வீட்டினுள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பை வெளியேற்ற அவர் பல்வேறு முயற்சிகள் செய்தும் முடியவில்லை.

    இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து பவானி நிலைய அலுவலர் பழனிச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று செல்லவேல் வீட்டில் இருந்த மூன்றடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டுள்ளனர்.

    • கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
    • போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஒரு ஆண், ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பின்புறம் உள்ள குடிசை மாற்று வாரியக்குடியிருப்பை சேர்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி கவுரி (35) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி 2-வது மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (29). கட்டிட தொழிலாளி. இவரது தாய் லட்சுமி (48). ராஜேந்திரனின் தங்கை ரேவதி. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி ரேவதி தனது குழந்தைக்கு பால் காய்ச்சுவதற்காக சமையல் அறைக்கு சென்று லைட் போடுவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.

    அப்போது ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்ததால் லைட் சுவிட்சை போட்டவுடன் சமையல் அறை முழுவதும் தீப்பிடித்துள்ளது.

    இதனால் அலறி துடித்த ரேவதியை காப்பாற்ற சென்ற அவரது தாய் லட்சுமி, உறவினர் கணேசன் ஆகியோர் மீதும் தீப்பிடித்தது.

    உடனடியாக அக்கம்ப க்கத்தினர் 3 பேரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக 3 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, கணேசன் ஆகியோர் சிகிச்சை முடிந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.

    ரேவதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் லட்சுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுகழஞ்சி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், சிறுகழஞ்சி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல கிராமங்களை ஒன்றிணைக்கும் பிரதான சாலையாக கிழக்கு தோட்டம் புதூர் சாலையை பொது மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர்.

    இந்நிலையில் 1997-ம் ஆண்டு முதல் தார் சாலை யாக மாற்றப்பட்டு சென்னி மலை யூனியனுக்கு சொந்த மாக பொதுமக்கள் பயன்பா ட்டில் உள்ளது.

    100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களால் சாலை சுத்தம் செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி செல்லும் வாக னங்களும் பொது போக்கு வரத்துக்கு பெரிதும் உதவி யாக கிழக்கு தோட்டம் புதூர் சாலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கி ரமிக்கும் நோக்கில் அனுமதி யின்றி ஆக்கிரமித்து அதன் மீது கம்பி வேலி அமைத்தும் ஆக்கிரமித்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை சிறுக்கழஞ்சி ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து வந்துள்ள னர். ஊராட்சித் தலைவர் ஜெயக்கொடி மனுவை ஏற்க மறுத்ததோடு புகாருக்கு உள்ளான நபரை அழைத்து விசாரிக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் தனிநபருக்கு ஆதரவாகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் ஊராட்சி தலைவர் செயல்பட்டு வருகிறார் என கூறி சிறுகழஞ்சி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதனால் சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சென்னிமலை போலீசார் மற்றும் சென்னிமலை யூனியன் பி.டி.ஓ. ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நாளை பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்ய ப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் மறியல் போரா ட்டத்தினை கைவிட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள நேதாஜி சவுக் பகுதியை சேர்ந்தவர் விக்கிமுக்தா (32). இவரது தந்தை அருண்பரசுராம் முக்தா (62). ஜவுளி வியாபாரிகள்.

    இவர்கள் இருவரும் அடிக்கடி ஈரோடு வந்து ஜவுளி கொள்முதல் செய்து கொண்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஜவுளி கொள்முதலுக்காக ஈரோடு வந்த இருவரும் பஸ் நிலையம் பின்புறம் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

    இதில் அருண்பரசுராமுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்து ள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை விக்கிமுக்தா கண் விழித்து பார்த்த போது அவரது தந்தை அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.

    உடனடியாக விக்கிமுக்தா அவரை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று ள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்பரசுராம் முக்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கொரோனா 2-வது அலையில் ஈரோடு மாவட்ட த்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆயிரக்க ணக்கா னோர் பாதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் கட்டுப்பாடு ஏற்பட்டது.

    மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. முதிய வர்கள் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தனர்.

    இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்த ப்பட்டது.

    முககவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக கடைபிடிக்க ப்பட்டது.

    இது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக மாவட்டத்தில் கொரோ னா தாக்கம் குறைய தொடங்கியது. கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் முதல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை கொரோ னாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொரோ னா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது.

    89 வயதான அந்த முதியவர் கடந்த 20-ந் தேதி சளி, காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்புடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக வந்தார்.

    அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 21-ந் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அந்த முதியவர் கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    இறந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு டன் சில இணை நோய்களும் இருந்துள்ளன.

    • கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதுார்,

    ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம்,

    ஆண்டகோத்தாம்பா ளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம்,

    திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பா ளையம், சாவடி பாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    • விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.

    அவ்வாறு வெளி யிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணை களுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழு வானது விதைப்ப யிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல், விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத் தரத்தினை உறுதி செய்கின்றது.

    இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை பி எஸ் ஆர் 2 இரகம் வல்லு நர் நிலை விதை ப்பண்ணை அமை க்கப்பட்டு விதைப்ப யிர் பூப் பருவம் மற்றும் அறு வடை பருவ த்தில் உள்ளது.

    இவ்விதைப்ப ண்ணை யை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெ ருக்கம் மற்றும் மரபியல் துறையின் இயக்குநர் ரவிகே சவன்,

    பேராசிரியர் குமரேசன், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு,

    அமுதா மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல இட ஆராய்ச்சி திடல்களான நிலக்கடலை, எள், கம்பு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டது.

    • விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் விரிவாக்குதல்,

    புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

    கீழ்பவானி திட்ட பிரதானகால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொட ர்பாக விவசாயி பெருங்குடி மக்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் அவர்களுக்கு உள்ள கருத்துக்களை தெரி வித்துள்ளனர். அவர்களை பொறுத்தவரை பழைய கட்டுமான பணி களை தொட ங்குவதிலே எங்களு க்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தி ருக்கிறார்கள்

    நீர்வளத்துறையின் சார்பாக பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் வாய்க்கால்களின் கதவனை களின் (சட்டர்) பழுதுகளை நீர்வளத்துறை அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற்கொண்டு பழுதுகளை நீக்க வேண்டுமெனவும்,

    அவற்றில் எந்த பணிக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதனை உடனடியாக மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களையும் வழங்கியுள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் புலம்பெயர் தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (கோவைமண்டலம்) முத்துசாமி,

    கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடி நிலகோட்டம்) கவுதமன், கீழ்பவானி வடி நிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற் பொறியாளர்கள்,

    உதவி பொறியாளர்கள், விவசா யிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட தொடர்புடைய துறை அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.

    • திங்களூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யர் தோட்டம் பகுதியில் சோதனையிட்டனர்.
    • போலீசாரை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே அய்யர் தோட்டம் பகுதியில் உள்ள காசுக்காரன்பாளையம் கிரே நகரில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து திங்களூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யர் தோட்டம் பகுதியில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு தனிமையில் ஒரு ஓட்டு வீடு மட்டும் இருந்தது. அந்த வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அந்த வீட்டிற்கு முன்பு பட்டாசுகள், வெடிப்பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் இருந்தன. வீட்டுக்குள் 5 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெருந்துறை வி. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்கிற சண்முகம் (37). அவரது மனைவி விஜயலட்சுமி (35). காசுக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த மவுலீஸ்வரன், சகுந்தலா மணி (42), திங்களூர், பாண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர் (29), அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (44) என தெரிய வந்தது.

    இதில் இளங்கோ என்கிற சண்முகம் இந்த வெடிப்பொருள் தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். அவர் போலீஸ் வரும்போது வீட்டில் இல்லாததால் தலைமறைவாகிவிட்டார். விசாரணையில் இளங்கோ அரசு உரிமம் பெறாமல் பட்டாசு தயாரித்து வந்தது தெரிய வந்தது. இளங்கோ வெளியே இருந்து பட்டாசு மூல பொருட்களை வாங்கி வந்து இங்கே வீட்டில் தயார் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    • மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்புடன் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 023 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×