என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம் மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன் பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம்,

    வெள்ளையம்பா ளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம்,

    கோவிலூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும் மற்றும்

    மெயின் ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்க ன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி,

    கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசி பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டி பாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி,

    ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்ட காட்டுப்புதூர், மூலகவுண்டன்புதூர், செலம்பக வுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

    இந்த தகவல்களை பவானி செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • மல்லிகா கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்து இருந்தார்.
    • அப்போது அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் திருமால் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மல்லிகா (47). இவரது வீடு அருகே 80 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 20 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இன்று அதிகாலை மல்லிகா இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்தார்.

    இதைப்பா ர்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தத்தளித்து கொண்டு இருந்த மல்லி காவை கயிறு மீட்டு உயிர டன் வெளியே கொண்டு வந்தனர்.

    மல்லிகா கிண ற்றில் விழுந்த உடன் தீயணைப்புவீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து வந்து மல்லிகாவை மீட்டனர்.

    இந்த சம்பவம் காரணமாக அதிகாலை நேரத்திலேயே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒருவர் லாட்டரி சீட்டு எண்களை சீட்டில் எழுதி கொடுத்து கொண்டு இருந்தார்.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் கேரளா லாட்டரி சீட்டு எண்களை போலியாக துண்டு சீட்டுக்களில் எழுதி கொடுத்து ஏமாற்றி வருவ தாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஆப்பக்கூ டல் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒருவர் லாட்டரி சீட்டு எண்களை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து கொண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆப்பக்கூடல் புதுப்பா ளையம் அந்தியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பதும்,

    அவர் பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு துண்டு சீட்டுகளில் லாட்டரி எண்களை எழுதி கொடுத்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ராஜேந்திரன் மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    • சண்முகபிரபு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    கோபி கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து ராஜே ஸ்வரி ஏற்கனவே திருமண மான ஈரோட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி சண்முக பிரபு (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு கோபி கொளப்ப லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜே ஸ்வரி டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள தங்கை வீட்டுக்கு கோவில் திருவிழா விற்காக குடும்பத்துடன் வந்து தங்கினார்.

    இந்நிலையியில் டி.என்.பாளையத்தில் ராஜேஸ்வரி யின் தங்கை வீட்டில் நேற்று காலை அவர் மற்றும் அவரது கணவர் சண்முக பிரபு குடும்பத்துடன் வாசலில் அமர்ந்து டீ குடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது சண்முக பிரபுவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு அந்த பகுதியில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சண்முக பிரபுவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முக பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் சண்முகபிரபுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • அணையில் இருந்து 3,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்ற ப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,039 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, காலிங்கராயன் பாசனத்தி ற்கு 600 கன அடி,

    குடி நீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.56 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.54 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.51 அடியாக உள்ளது.

    மழை ப்பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் அதிக அளவில் வெளி யேற்றப்பட்டு வருவதாலும் ஈரோடு மாவட்ட அணை களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் கூறி பிரசாரம் செய்யப்பட்டது.
    • அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் ஈரோடு ஸ்டோனி பாலம், அண்ணா நகர், சாந்தாங்கருக்கு மற்றும் கிராமடை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    இப்பிரசாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளான இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகங்கள், ஆங்கில வழிக்கல்வி மற்றும் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்து கூறியும்,

    அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை வலியுறுத்தியும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் போன்றவற்றை எடுத்துக்கூறியும் பிரசாரம் செய்யப்பட்டது.

    மேலும் அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

    தற்போது எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த பிரச்சாரத்தில் ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது.
    • இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, மான், புலி, காட்டு பன்றிகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதியில் திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும், கார், பஸ், வேன், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்படி வரும் யானைகள் ரோட்டில் உலா வருவதும்,

    அந்த வழியாக லாரிகளில் கொண்டு செல்லும் கரும்புகளை ருசித்து செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இந்நிலையில் இரவு சத்தியமங்கத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது. இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அதிக வாகனங்கள் செல்லும் சாலையாகும். இந்த ரோட்டில் ஒற்றை யானை வந்ததால் இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் உடனடியாக விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில் வனக்குழு சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்தும் மற்றும் அவர்கள் வந்த வாகனங்கள் மூலம் அதிக ஒலி எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8 பேர் பாதிப்பி ல் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

    மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 038 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 735 பேர் உயிரிழ ந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சிறப்பு கட்டணம் செலுத்துதல் திட்டத்தின் கீழ் 14 பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • 2 விடுதிகளில் 66 மாணவ, மாணவிகளும் பயின்ற வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

    இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை யின் சார்பில் மனிதநேய வார விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பா க நடைபெற்று நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நமது மாவ ட்டத்தை பொறுத்தவரையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகின்றது.

    அதன்படி பெண் கல்வி ஊக்குவிப்பதற்காக (3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) 11,540 மாணவிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டி லான உதவித்தொகை யினையும், சுகாதார குறை வான தொழில் புரிவோரு க்கான 1711 மாணவ, மாணவிகளுக்கு ரூ.51.33 லட்சம் மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகை யினையும், நற்பெயர் பெற்ற பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை பயில்விக்கும் திட்டத்தின் கீழ் 70 மாணவ, மாணவி களுக்கு ரூ.22.88 லட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகையினையும், விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக 9 கல்லூரி களுக்கு ரூ.86,846 மதிப்பீ ட்டிலான உதவித்தொகை யினையும் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்துதல் திட்டத்தின் கீழ் 14 பள்ளி களுக்கு ரூ.50,444 மதிப்பி லான உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளி யில் 157 மாணவ, மாணவி களும், 2 கல்லூரி விடுதி களில் 114 மாணவ, மாணவி களும், 28 பள்ளி விடுதிகளில் 720 மாணவ, மாணவிகளும் மற்றும் பழங்குடியினர் நலஉண்டு உறைவிட பள்ளியில் 8 தொடக்க ப்பள்ளியில் 292 மாணவ, மாணவியர்களும், 9 நடுநிலைப்பள்ளிகளில் 410 மாணவ,மாணவியர்களும், 3 உயர்நிலைப்பள்ளிகளில் 496 மாணவ,மாணவிகளும், 2 மேல்நிலைப் பள்ளிகளில் 597 மாணவ, மாணவிகளும் மற்றும் 2 விடுதிகளில் 66 மாணவ, மாணவிகளும் பயின்ற வருகின்றனர்.

    மேலும் 5166 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்ப ட்டுள்ளது. அரசு அளிக்கி ன்ற நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பெற்று கல்வி கற்கின்ற மாணவ செல்வங்கள் தங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொள்வதோடு தங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிப்பு, கண்காணிப்பு குழு உறுப்பினர்களான 16 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரதம், மங்கள இசை, தேவாரபாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் தாட்கோ மூலம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ.11 லட்சம் வாகன கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலம்) கணேசன், ஆதிதிராவிடர் நலக்குழு, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.
    • அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ஈரோடு :

    ஈரோட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னுடைய பொதுவாழ்வில் சிவாஜி கணேசன், சோனியாகாந்தி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய 3 பேருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை மறக்கமாட்டேன். எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.

    ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா சாலை என பெயர் வைத்ததற்கு அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன். அமைச்சர் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    ஈரோடு பகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்த எஸ்.கே.பரமசிவம், கோபி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகிய இருவருக்கும் சித்தோடு மற்றும் கோபியில் சிலை வைக்கவேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    இத்தனை ஆண்டுகளாக கோபி எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடியவர் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்ல வேண்டியவராகவே இருக்கும் நிலையில் அங்கு எந்த பணியும் செய்யவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • மாரிமுத்து ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (37). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் சத்தி-கோவை ேராட்டில் உள்ள ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி தெரிய வந்த தும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக சத்தியமங்கலம் கொமாரபாளையத்தை சேர்ந்த மோகன் (38) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மோகனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

    மேலும் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவும் இவரும் நண்பர்கள் என்றும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்தனர்.

    மேலும் மாரிமுத்துவை கொலை செய்தது ஏன்? என்று வாக்குமூலமும் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    நானும் மாரிமுத்தும் நண்பர்கள். அவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் நாங்கள் நட்பு ரீதியாக பழகி வந்ேதாம்.

    ஆனால் மாரிமுத்து என் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தவறாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று என்னை போனில் அழைத்தார். நான் சத்தி-கோவை ரோட்டில் உள்ள ஒரு குடோன் அருகே சென்றேன். அப்போது மாரிமுத்து என்னிடம் பணம் கேட்டார்.

    மேலும் அவரது மனைவியுடன் பழகுவதை சந்தேகப்பட்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது காரில் வைத்திருந்த இரும்பை வைத்து மாரிமுத்துவை தாக்கினேன்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்தார். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி சென்றேன்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் மோகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் சிறையில் அடைத்தனர்.

    • 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மணல் மேடு பகுதியில் சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்த 3 பேர் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28), காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் (56) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ.130 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×