லாட்டரி சீட்டு எண்களை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து விற்ற முதியவர் கைது

ஒருவர் லாட்டரி சீட்டு எண்களை சீட்டில் எழுதி கொடுத்து கொண்டு இருந்தார்.ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு எண்களை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து விற்ற முதியவர் கைது
Published on

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் கேரளா லாட்டரி சீட்டு எண்களை போலியாக துண்டு சீட்டுக்களில் எழுதி கொடுத்து ஏமாற்றி வருவ தாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆப்பக்கூ டல் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒருவர் லாட்டரி சீட்டு எண்களை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து கொண்டு இருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆப்பக்கூடல் புதுப்பா ளையம் அந்தியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பதும்,

அவர் பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு துண்டு சீட்டுகளில் லாட்டரி எண்களை எழுதி கொடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ராஜேந்திரன் மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com