என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மல்லிகாவை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்ட காட்சி.
80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
- மல்லிகா கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்து இருந்தார்.
- அப்போது அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்தார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் திருமால் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மல்லிகா (47). இவரது வீடு அருகே 80 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 20 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இன்று அதிகாலை மல்லிகா இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்தார்.
இதைப்பா ர்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தத்தளித்து கொண்டு இருந்த மல்லி காவை கயிறு மீட்டு உயிர டன் வெளியே கொண்டு வந்தனர்.
மல்லிகா கிண ற்றில் விழுந்த உடன் தீயணைப்புவீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து வந்து மல்லிகாவை மீட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக அதிகாலை நேரத்திலேயே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






